Cinema

பிரபல நடிகை கல்பனா குறித்த உண்மைகளை உடைத்த சகோதரி ஊர்வசி!!!

KALPANA , OORVASI
KALPANA , OORVASI

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து மலையாளம் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து இன்று அளவிலும் சினிமாவில்  ஒரு பிரபலமான ஹீரோயினியாக வலம் வந்து கொண்டு உள்ளவர் தான் ஊர்வசி!! இவரு 90களில் இருந்து பல திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்து வந்தார். மேலும் தற்பொழுது பல திரைப்படங்களில் சைடு கேரக்டரில் நடித்து வருகிறார். தற்பொழுது இவருக்கு 55 வயதாகியும் கூட சினிமாவில் எப்போதும் போல பிசியாகவே இருந்த வருகிறார். தமிழில் முதன்முறையாக முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் பாக்கியராஜ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். தனது முதல் திரைப்படத்திலேயே இயல்பான நடிப்பினால் அதிக அளவில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார். தற்பொழுது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.


தமிழ் மலையாளம் கன்னடம் ஹிந்தி மற்றும் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இதுவரை 702 திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் உச்சகட்ட நடிகையாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பு வாழ்க்கை ஆனது அவருடைய 10 வயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து இன்று கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளுக்கு தாயாக நடிக்கும் கதாபாத்திரம் வரை தொடர்கிறது என்று கேள்விப்படும் பொழுது மிகவும் வியப்பாகவே உள்ளது.இன்றளவிலும் சினிமாவில் இவர் உச்ச கட்டத்தில் வளர்ச்சி அடைந்து இருக்கிறார் என்றால் அவரின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம் என்றே கூறலாம். இப்படிப்பட்ட ஒரு பிரபல நடிகைக்கு கலாரஞ்சனி மற்றும் கல்பனா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தான்!! இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஊர்வசி தனது சகோதரியான கல்பனா குறித்து யாருக்கும் தெரியாத விஷயத்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்!! அவர் கூறியிருப்பது என்னவென்று சற்று விரிவாக காணலாம்!!

நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா தமிழ் திரையுலகில் முதன் முதலில் பாக்யராஜுக்கு ஜோடியாக  சின்ன வீடு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சதிலீலாவதி, பம்பல் கே சம்பந்தம், டும் டும் டும் போன்ற திரைப்படங்களிலும், மலையாளம் போன்ற பிற  மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் இயற்கையை எய்தினார். இவரின் இறப்பு சினிமா வட்டாரத்திலும் இவரின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னதான் சினிமாவில் சூப்பராக நடித்திருந்தாலும் கூட ஊர்வசிக்கு கிடைத்த வரவேற்பு அவரின் சகோதரி ஆன கல்பனாவிற்கு கிடைக்கவில்லை என்றே கூறலாம். இதனைத் தொடர்ந்து ஊர்வசியும் பேட்டி ஒன்றில் தனது சகோதரியான கல்பனாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்புகளில் எல்லாம் கல்பனா நடிக்காமல் தான் நடித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு கல்பனாவிற்கு வந்த வாய்ப்பினை தான் பயன்படுத்தினாலும் கூட எந்த விதத்திலும் தன் மீது கோபப்படாமல், தனது வளர்ச்சியை பார்த்து மிகவும் சந்தோஷம்தான் பட்டு உள்ளார் என்றும், என் மீது என் அக்காவிற்கு மிகவும் பாசம் என்று கூறியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு சினிமா உலகிலுமே தனது அக்கா கல்பனா தன்னைவிட திறமைசாலியாக இருந்தும் கூட  சரியான மரியாதையும், அங்கீகாரம் மற்றும் விருதுகள் கிடைக்க வில்லை என்றும், விலும் கலந்து கொள்ளாமல் இருந்ததாகவும், ஆனால் கல்பனாவின் இறப்பிற்கு பிறகு நிறைய விருதுகள் வழங்கினார்கள் ஆனால் அதனை வாங்கவில்லை என்று நேர்காணலில் ஊர்வசி கண்ணீருடன் கூறியுள்ளார். இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.