இந்துக்கள் குறித்தும் சிவனடியார்கள் குறித்தும் உயர்வாக ஏன் காட்சி படுத்துகிறீர்கள் என தொடர்ச்சியாக விடாமல் ரிப்போர்டர் ஒருவர் கேட்க அதற்கு மோகன் கொடுத்த பதிலால் மூக்கு உடைப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பகாசூரன் இயக்குனர் மோகன் ஜியுடனான செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில், செய்தியாளர்கள் பலரும் கேட்ட கேள்விகளுக்கு மோகன் ஜி தெளிவாக பதிலளித்தார். அப்போது, உ.பிஸ் செய்தியாளர் ஒருவர், உங்களது படத்தில் ஹிந்துத்துவா தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறது. அதேபோல, இப்படத்திலும் ஹிந்துத்துவா தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதோடு, சிவனடியார்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, உங்களுக்கு படம் எடுக்க பா.ஜ.க. பின்னணியில் பண உதவி செய்கிறதா என்று கேட்டார்.
அதற்கு, நீங்கள் மீடியாக்காரர்கள்தானே, அப்படி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்து செய்தி போடுங்கள். தொடர்ந்து இதே மாதிரியான கேள்விகளை கேட்பது அருவெறுப்பாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு பைனான்ஸ் வாங்கி படம் எடுத்து, சம்பாரிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நான் யார் யாரிடமெல்லாம் கடன் வாங்கி இருக்கிறேன் என்று சொல்கிறேன். கடன் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்கிறார்.
ஆனாலும் விடாத அந்த நிருபர், இல்லை நீங்கள் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு ஆதரவாகவே படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஹிந்துக்களை மட்டுமே நல்லவர்களாக காட்டுகிறீர்கள் என்று தனது சுயரூபத்தைக் காட்டினார். இதனால், ஆத்திரமடைந்த மோகன் ஜி, ஆமா, அதிலென்ன தப்பு. ஹிந்து மதத்தைத் தவிர வேற எந்த மதத்தை நாம இதுவரை குற்றம் சொல்லி இருக்கிறோம் என்று கேட்க, அதற்கு அந்த நிருபர், இவ்வளவு நாட்களாக சிவனடியார்கள் வரவில்லை, தற்போது மட்டும் ஏன் புதிதாக சிவனடியார்கள் வருகிறார்கள் என்று கேட்கிறார்.
அதனால் என்ன தப்பு, வரட்டுமே என்று மோகன் ஜி பதிலளித்துக் கொண்டிருக்க, இடைமறித்த நிருபர், அப்படியென்றால் சாமியார் நல்லது மட்டுமே செய்கிறார்களா, தவறு செய்வதில்லையா என்று கேட்க, சாமியார்கள் தவறு செய்கிறார்களா இல்லையா என்பதை படத்தை பார்த்துவிட்டு கேளுங்கள். தவிர, நான் தினமும் கோயிலுக்குப் போகிறேன். நான் பார்க்கும் கேரக்டர்களை மட்டுமே படத்தில் கொண்டு வருவேன். இதை தொடர்ந்து செய்வேன். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று பதிலளித்து அந்த உ.பிஸ் நிருபரின் மூக்குடைத்திருக்கிறார்.
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இயக்குனர் மோகன் ஜியின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.