Cinema

கும்பகோணத்தை சுற்றியுள்ள மர்மங்கள்!! அசால்ட்டாக புட்டு வைத்த நடிகர்....

ACTOR ANUMOHAN
ACTOR ANUMOHAN

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பகோணம் பற்றி அறியாத ஆட்களே இருக்க மாட்டார்கள். கும்பகோணம் ஒரு கோவில் நகரமாக திகழ்ந்து வருகிறது. கும்பகோணத்தில் வெற்றிலை பாக்கு மிகவும் ஃபேமஸான ஒன்றாகவே இருக்கிறது. மேலும் உலகமே போற்றும் கணித மேதை ராமானுஜர்  இந்த கும்பகோணத்தில் தான் பிறந்து வளர்ந்தார் என்று கூறப்படுகிறது. பழங்காலத்தில் சோழர்கள் தான் கும்பகோணத்தை ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் தங்களுடைய செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் இடமாகத்தான் கும்பகோணத்தை வைத்து வந்துள்ளனர் என்று பல பாடல்கள் வழியாக நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கும்பகோணம் உருவாவதற்கான வரலாறு என்னவென்று பார்த்தால், நாம் அனைவரையும் படைக்கும் ஆற்றல் வாய்ந்த கடவுள் பிரம்மன் உலகம் அழியப் போகும் செய்தியை அறிந்தார். அப்போது படிப்பதற்கு தேவையான அனைத்து ஞானத்தினையும் ஒரு குடத்தில் அமுதத்துடன் அவரின் ஞானம் அனைத்திந்தினையும் போட்டு கும்பம் போன்று உருவாக்கி அதனை இமய மலைக்கு மேல் வைத்துவிட்டார்.


ஆனால் உலகம் அழியும் பொழுது ஏற்பட்ட சுனாமியின் போது இமயமலையின் மேல் இந்த கும்பம் தண்ணீரில் அடித்து விட்டு ஒரு இடத்தில் போய் ஐக்கியம் ஆகிறது. அந்த கும்பத்தினை நோக்கி சிவபெருமான் ஒரு வில்லம்பினை ஏய்கிறார். மேலும் அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தினை உருவாக்கி அந்த லிங்கத்தில் அவரும் ஐக்கியம் ஆகி விடுகிறார். இவ்வாறு அந்த குடம் என்று அழைக்கப்பட்ட கும்பம் அங்கு சென்று விழுந்ததால் அந்த இடம் கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய அதிசயங்கள் நிறைந்த கும்பகோணத்தில் தான் நவகிரகங்கள் நிறைந்த கோவிலில் அமைந்துள்ளது. அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பது என்னவென்றால்!!தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகமான கோவில்களை கொண்ட ஊர் எது என்று தெரியுமா?? தமிழ்நாட்டில் மிகவும் அதிகமான கோவில்கள் நிறைந்த ஊர் என்றாலே அது கும்பகோணம் தான்!! கும்பகோணத்தை சுற்றி தான் அனைத்து நவகிரகங்களின் கோவில்களும் அமைந்திருக்கும். இதன் காரணம் என்னவென்று பார்த்தால் சூரியனின் வெளிச்சமானது பூமி கடிகாரத்தைப் போல சுற்றிக்கொண்டு இருந்தாலும் கூட சூரியனின் கதிர்கள் பூமியின் மீது விழுகிறது.

மேலும் சூரிய கதிர்கள் பகல் மட்டும் இன்றி இரவில் கூட பூமியின் மீது விளக்கம் செய்கிறது. அவ்வாறு விழும் கதிர்கள்  நேரடியாக படும் இடம் தான் இந்த கும்பகோணம். இந்த கும்பகோணத்தை சுற்றி நவகிரகங்களின் கோவில்கள் அமைந்திருப்பதால் சூரியனின் கதிர்கள் சுக்கிரனின் மீது பட்டு கும்பகோணத்திற்கு வரும், புதன் மீது பட்டும் கும்பகோணத்திற்கு வரும்!! இதுபோன்று ஒவ்வொரு கிரகத்தின் உடைய கதிர்களையும் சூரியன் வாங்கி கொடுக்கும் இடம்தான் இந்த கும்பகோணம். எனவேதான் கும்பகோணத்தை சுற்றி நவகிரகங்களின் கோவில்கள் அமைந்திருக்கிறது. கும்பகோணத்திற்கு சென்று ஒருநாள் இரவு ஆவது தங்கி வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி வருவதற்கும் இதுதான் காரணமாக இருந்திருக்கலாம். மேலும் நல்ல வெளிச்சமாக இருந்தாலும் கூட புதனின் கதிர்கள் நம் உடலுக்கு கிடைக்கும். மேலும் இந்த கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ள நவகிரக கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று அனைத்து கடவுள்களையும் தரிசித்து வருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். அவ்வாறு ஒரே நாளில் நவகிரகங்களை தரிசனம் செய்தால் அவர்களின் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் சரியாகி  மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்!! இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கும்பகோணத்தில் எவ்வளவு ஆச்சரியங்கள் நிறைந்திருக்கிறதா என்று நினைத்து வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!! இந்த வீடியோவில் பேசியிருப்பது நடிகர் அனு மோகன்...