24 special

அண்ணாமலையின் 6 மாச அசைன்மெண்ட்; கலக்கத்தில் காங்கிரஸ்; கிடுகிடுக்கும் திமுக!

Annamalai
Annamalai

காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு கிலி கிளப்பும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 6 மாதத்திற்கு பட்டி, தொட்டி எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அண்ணாமலை திட்டம் திட்டி வருகிறாராம். 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா (பாரத் ஜோடோ) யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம்  ஆம் தேதி தெற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கினார். ஐந்து மாத கால யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக 3,500 கிமீ தூரம் கடந்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது. வெளியில் இருந்து பார்க்க இது நாட்டு மக்களின் கஷ்டங்களை நேரில் கேட்டறிய பழமையான அரசியல் கட்சியின் வாரிசு மேற்கொள்ளும் பயணமாக தெரிந்தாலும், ராகுல் காந்தி போகும் மாநிலங்களில் எல்லாம் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைகளை சமாதானம் செய்வது, கட்சி தாவலைக் கட்டுப்படுத்துவது, உட்கட்சி பூசலை சிமெண்ட் பூசி மறைப்பது போன்ற வேலைகளை தான் மெயினாக செய்து வருவதாக கூறப்படுகிறது. 

எனவே ராகுல் காந்தியின் நடைபயணம் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கடன் மற்றும் சூதாட்ட ஆப்களால் அதிகரிக்கும் தற்கொலை, பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை, விவசாய பெருங்குடி மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற காரணங்களால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 

எனவே தமிழ்நாடு முழுவதும் 6 மாதத்திற்கு பட்டி, தொட்டி எல்லாம் பயணம் செய்ய உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறியவும், அவர்களுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் சிந்தாமல் சிதறாமல் செல்கிறதா? என்பதை கேட்டறிய உள்ளாராம். இதனிடையே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியில் சேர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஏராளமான தொண்டர்கள் ஆவலுடன் இருக்கிறார்களாம்.

இதில் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் கொள்கையும், அண்ணாமலையின் அணுகுமுறையும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் நிறைய பேர் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தலைமையை அணுகுவது எப்படி, கட்சியில் இணைவது எப்படி போன்ற விவரங்கள் தெரியாமல் ஏராளமானோர் முடக்கியுள்ளனர். எனவே அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் சேர உள்ளார்களாம். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை செம்ம அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.