Cinema

இதெல்லாம் தேவையா உனக்கு..வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பா.ரஞ்சித் ..

Pa.ranjith
Pa.ranjith

தனது முதல் படமான அட்டக்கத்தி படத்திலிருந்து மெட்ராஸ், கபாலி, காலா என தான் இயக்கிய திரைப்படங்களில் ஒரு தலைசார்பான சாதியத்தை திணித்திருப்பார் பா.ரஞ்சித். தான் சார்ந்த சாதியின் நிறமாக நீலம் கலரை வைத்து நீலம் புரடெக்சன் என்கிற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தனது தயாரிப்பு மூலம் சாதியம் கலந்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களையும் தனக்கு கீழ் உதவியாளராக பணியாற்றியவர்களை இயக்க வைத்து சாதிய் படங்களை வெளியிட்டார் பா.ரஞ்சித்.


ஆகவே அடுத்தடுத்து வரும் படங்களிலும் சாதியக் குறியீடுகளை திணிக்கும் வகையில் தயாரிக்க உள்ளதாக திரை விமர்சகர்கள் கூறுகிறார்கள்.  இவர் இயக்கிய மற்றும் தயாரித்த படங்களில் ஹீரோக்கள் உயர்சாதி பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதை போல கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தப்பெண்களின் பெற்றோர்களும், ஹீரோயின் சார்ந்த சாதியினர் காதலுக்கு எதிரிகளை போலவே உருவகப்படுத்திய காட்சிகள் இடம்பெறாத ரஞ்சித் படங்களே இல்லை எனக் கூறுகிறார்கள் சினிமா துறையினர். 

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனியார் யூட்யூப் சானலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் , எனது படங்களில் கதாநாயகிகளை உடல் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நான் காட்டியிருக்கவே மாட்டேன் , பெண்களை பாலியல் ரீதியாக காட்டி ஆடியன்ஸை சுவாரசிய படுத்தியிருக்கவே மாட்டேன் , குறிப்பாக என் படங்களில் பெண்களை தவறாக காட்டியிருக்கவே மாட்டேன் அது எனது கொள்கை, எனக்கென்று சில சட்ட விதிகள் இருக்கிறது என்று உணர்வு பூர்வமாக பேசினார்.

ஆனால் ரஞ்சித் சொன்னதை செய்தாரா ..? இல்லை முதலில் அட்டகத்தி படத்தை எடுத்துக்கொண்டால் , படம் ரிலீசான பிறகு டிவிட்டரில் பெண் குறித்த ஆபாச ட்வீட்டை போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிகொண்டார் , பிறகு அட்டக்கத்தி படத்தில் வரும் ஒரு வசனம் காதலிச்ச உடனேயே மேட்டர முடிச்சிடனும் என்ற , வசனமாக இருக்கட்டும், தினேஷ் மதுமிதா பஸ் சீன் காட்சிகள் படு ஹாட்டாக எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கட்டும் , கபாலி படத்தில் ரித்திகா சீனாக இருக்கட்டும் , சார்பட்டா படத்தில் வரும் முத்த காட்சிகளாக இருக்கட்டும் இப்படி இவர் பெண்களை காட்டிய விதத்தை அடுக்கிக்கொண்டே போகலாம் என்கின்றனர் சமூகவளைதலவாசிகள் ... தற்போது ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பலரும் அவரது படக்காட்சிகளை வைத்து பதிலடி கொடுத்து வருகிறார்கள் . 

சினிமாவை பொருத்தவரை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப க்ளாமர் காட்சிகள் இல்லாமல் படங்கள் வெளியாகுவது கிடையாது. முன்னணி நடிகர்கள் படங்களில் கூட எதாவது காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும். க்ளாமர் இரட்டை வசனத்திற்கு என்றே சில இயக்குனர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் நான் அம்பேத்கர் வழிவந்தவன் எனது படங்களில் சமூக சீர்திருத்த கருத்துக்கள் மட்டும் தான் இடம் பெரும் என்று வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட் பா.ரஞ்சித்தை இதெல்லாம் தேவையா உனக்கு என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.