எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக களம் இறங்க பலர் கட்சி தலைவர்களை தாஜா செய்துவரும் சூழலில் திமுகவில் உதயநிதி மூலம் சீட் பெற திமுகவினர் முயன்று வருகின்றனர், குறிப்பாக உதயநிதி ஆதரவு கோட்டா என்ற ஒன்று திமுகவில் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது, அன்பில் மகேஷ் தொடங்கி எம்.எம்.அப்துல்லா வரை பலர் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கோவை மாநகர மேயர் வேட்பாளராக கட்சி இடத்தை கைப்பற்ற பலரும் முயன்று வருகிறார்களாம் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கார்த்திகேய சேனாதிபதி இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது, இதையடுத்துதான் கார்த்திகேயே சேனாதிபதி உதயநிதி ஏன் அமைச்சர் ஆக்க வேண்டும் என முழு நீள கட்டுரை எழுதியுள்ளார்.
குறிப்பாக அதில் பாரதிய ஜனதா கட்சி, தேசிய கட்சியாக அவர்களின் மத்திய அமைச்சர்கள் எந்த அறிவும் இல்லாமல், பாராளுமன்றத்தில் கோஷம் போடுவதும் ஜெய் ஹிந் கூறுவதும், மக்கள் பிரச்சனைகளான NEET மற்றும் பல மசோதாக்கள் குறித்து எதிர் கட்சியினர் விவாதிக்க முற்படும் போது கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி , மக்களை ஏமாற்றிப் பிழைப்பதையே முழு நேரத் தொழிலாக வைத்து இருக்கக் கூடியவர்கள் .
பாஜகவிற்குத் தகுதியைப் பற்றிப் பேசுவதற்கோ அல்லது நாம் யாரை அமைச்சர் ஆக்குவது என்பது குறித்த முடிவை விமர்சிப்பதற்கோ எந்த யோக்கியதையும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் கருத்தை புறந்தள்ளி உதயநிதியை அமைச்சர் ஆக்கவேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார் கார்த்திகேயன். (அவர் எழுதிய முழு கட்டுரை வேண்டுதல் மடலை படிக்க கிளிக்.)
இதை பார்த்த பாஜக மற்றும் அதிமுகவினர் இப்படி ஒரு உருட்டை வாழ்நாளில் பார்த்தது இல்லை மேயர் சீட் வேண்டும் என்றால் நேரடியாக கேட்டு கொள்ளுங்கள் இப்படியா உருட்ட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர் கார்த்திகேய சேனாதிபதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தால் அடுத்து மகேந்திரன் என்ன செய்ய போகிறார் என்ற விவாதம் எழுந்துள்ளது.