உக்ரைனில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது :- உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 3) ஆலோசனை நடந்தது.
இன்று காலை 6 மணிவரை தமிழகத்தை சேர்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழக அரசின் செலவில் அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளுக்கு சென்று, அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்களும் இணைந்து சென்று ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது, இந்த சூழலில் தமிழக அரசின் செயல் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது, வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு எவ்வாறு தலையிட முடியும் என பலர் கிண்டல் அடிக்க தொடங்கினர்.
அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்த பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு தமிழகம் சார்பில் அமைக்கபட்டுள்ள குழுவிற்கு அனுமதியளிக்க வேண்டும் என கூறியதும் கடும் கிண்டலுக்கு உள்ளாகியது, இந்த சூழலில்தான் ஆங்கில ஊடகத்தில் சிக்கியுள்ளார் திமுகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சரவணன்.
10 நாட்களுக்கு பிறகு குழு அமைத்து உக்ரைனில் சென்று என்ன செய்ய போகிறீர்கள் எனவும், உக்ரைனிற்குள் சென்று குதிக்க போகிறீர்களா எனவும் கடுமையாக வைத்து செய்துள்ளார் ஊடகத்தை சேர்ந்த நெறியாளர், இந்த சூழலில் அதற்கு முறையாக பதிலளிக்காத சரவணன் ஆளும் கட்சியிடமும் இது போன்ற கேள்வியை கேளுங்கள் என மடை மாற்றினார்.
மொத்தத்தில் இதுவரை மெல்டிங் சரவணன் என நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்ட சரவணன் நேற்றைய உக்ரைன் விவாதத்தில் இருந்து "டரியல்" சரவணனாக மாறிவிட்டார் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கிண்டல் எழுந்துள்ளது.
விவாத வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.