தோனி படை வெற்றிக்கு லேபிள் ஒட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி கிடைத்த தரமான பதிலடி !msdhoni
msdhoni

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை வாழ்த்த சென்று அதில் சில வார்த்தைகள் மிஸ்ஸாக ,முன்பெல்லாம் அரசியலில் தான் லேபிள் ஒட்டினீர்கள் இப்போது விளையாட்டு வெற்றியிலும் லேபிள் ஒட்டுகிறீர்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர் .

சென்னை கொல்கத்தா இடையே நடந்த 2021 ம் ஆண்டின் ஐ பி எல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது , இதையடுத்து பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்  அந்த வகையில் மின்துறை  அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் வாழ்த்து செய்தியில் அன்று மாண்புமிகு தலைவர் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு வென்றது.. இன்று தலைநகரம் வென்றது...உழைப்பு உயர்வு தரும் என குறிப்பிட்டு இருந்தார் .

இன்று தலைநகரம் டோனியின் தலைமையில் வெற்றி பெற்றது என குறிப்பிட்டு இருந்தால் எந்த சர்ச்சையும் இருந்து இருக்காது ஆனால் முதல்வர் ஸ்டாலினை திமுகவினர் அலைக்கும் தளபதி என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தியதால் இதிலும் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா என கிண்டல் அடித்து வருகின்றனர் அதில் சில உங்கள் பார்வைக்கு ; அன்று கழகம் வெல்ல பிரஷாந்த் கிஷோர் என்ற ஒரு வடநாட்டான் உதவினான்!இன்று தலைநகரம் வெல்ல தோனி என்ற வடநாட்டான் உதவினான்!ஆக.. இதற்கும் ஸ்டிக்கர் ஒட்டப்படும்!

Share at :

Recent posts

View all posts

Reach out