டெல்லியில் நாளை மறுநாள் (17ஆம் தேதி) பிரதமர் மோடியை தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு இன்று உறுதியாகியுள்ளது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து ஏ.கே.எஸ் விஜயன் வாழ்த்துப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை மறுநாள் காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். காலை 10:30 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பிரதமருடனான இந்த சந்திப்பின் போது கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு, தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ள ஸ்டாலினுக்கு பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் சவால் விடுத்து வருகின்றனர்.
திமுக வெற்றி பெற்ற பின்பு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என அழைத்தது, திமுகவின் இரண்டாம் தர பேச்சாளர் பிரசன்னா போன்றவர்கள் ஒன்றிய அரசு என பிரிவினை வாதம் பேசிய நிலையில் அதையே தமிழக அமைச்சர்கள் முதல் முதல்வர் என பலரும் பின்பற்றி பேசிவந்த சூழலில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த சூழலில் டெல்லி செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்தித்துவிட்டு வெளியே வந்து ஒன்றிய அரசு என பேட்டி கொடுக்கட்டும் பார்க்கலாம் என சவால் விடுத்துள்ளனர், இந்நிலையில் பாஜகவினரின் சவாலை திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா அல்லது அமைதியாக தமிழகம் திரும்புவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் டெல்லி செல்லும் ஸ்டாலினுக்கு எதிராக இணையத்தில் gobackstalin முழக்கம் மீண்டும் உலக ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அதனை எவ்வாறு முறியடிப்பது என திமுக ஐடி விங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறதாம்.