Tamilnadu

திமுகவிற்கு தாவும் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் வழக்கில் இருந்து தப்பிக்க முடிவு !

Tnnews24air
Tnnews24air

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது, இந்நிலையில் தேர்தலில் திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.


இணைந்த அன்றே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சரவணன், எப்படியும் சரவணன் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் சிலர் கருதியதால் சரவணனுக்கு சீட் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது, ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை, திமுக வேட்பாளர் தளபதியிடம் தோல்வியை தழுவினார் சரவணன்.

இந்நிலையில் சரவணன் மீது இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படும் காலாவதியான மருத்துவ உபகரணத்தை பயன்படுத்திய வழக்கு கடந்த ஆட்சியில் போடப்பட்டது, அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், அந்த வழக்கை காரணம் காட்டி திமுக சரவணனை மிரட்டலாம் என கருதுவதாலும், பாஜகவில் உரிய அங்கிகாரம் தனக்கு கிடைக்காது என சரவணன் கருதுவதாக கூறப்படுகிறது.

பாஜகவில் இணைந்த சரவணன் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாரே தவிர அதன் பிறகு அவரை காணவில்லை, மேலும் தேர்தல் தோல்விக்கு பின்னர் கடும் அமைதியாக அவர் இருப்பதாக கூறப்படுகிறது, திமுகவில் தனக்கு நெருக்கமாக உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்தித்து மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பி வர பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைந்த முகுல் ராய் மீண்டும் மம்தா பானர்ஜியை சந்தித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது போன்று சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் என்ற செய்திதான் இப்போது மதுரை சுற்று வட்டார பகுதிகளில் பேசு பொருளாக மாறியுள்ளது.