24 special

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களை கதறவிட்ட சபாநாயகர்..! பாஜக எம்பிக்கள் ஒரே குஷி..!

om birla and DMK MPs
om birla and DMK MPs

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்களை சபாநாயகர் கதற விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 


சட்டையை கிழித்துவிடுவது, குட்கா பாக்கெட்டுகளை எடுத்து வருவது, தரையில் அமர்ந்து தர்ணா செய்வது என திமுக, காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும் போது தமிழக சட்டப்பேரவையை நடத்தவிடாமல் இருக்க ஏராளமான சித்து வேலைகளை செய்துவது வழக்கம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். அதே ஞாபகத்தில் நாடாளுமன்றத்திலும் குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

இன்று நாடாளுமன்றத்தில் ஜீரோ ஹவரின் போது சபாநாயகர் ஓம் பிர்லாவின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து பேசிய திமுக எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கைக்கு ஆளாகியுள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் சாதிவாரிய சுடுகாடுகள் மற்றும் புதைக்குழிகள் பற்றி பேசினார். 

2014ம் ஆண்டு கர்நாடகாவில் கொண்டு வரப்பட்ட சட்டம் குறித்து பேசிய அவர், சாதிவாரிய சுடுகாடுகளை ஒதுக்கீடு செய்வதை தடை செய்ய மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என பேசினார். அப்போது இடைமறித்த சபாநாயகர் ஓம்பிர்லா, “நீங்கள் ஆளும் மாநில அரசைச் சேர்ந்த எம்.பி. தானே. இந்த பிரச்சனை குறித்து அங்கு போய் பேசுங்கள்” என்றார். ஆனால் அவர் சொல்வதை கேட்காமல் ரவிக்குமார் தொடர்ந்து பேச, உடனே அடுத்த எம்.பி.யை பேச அழைத்துவிட்டு, இந்த பிரச்சனைக்குறித்து தமிழ்நாடு அரசிடம் முறையிடுங்கள் என கறாராக கூறிவிட்டார். 

இதனையடுத்து திமுக எம்.பி. பாலு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாகவும், தமிழகத்தில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது குறித்தும் பேசினார். இதுதொடர்பாக அவையில் விவாதிக்க நோட்டீஸ் கொடுக்கும் படி அறிவுறுத்தினார். ஆனால் பாலு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த ஓம் பிர்லா, அடுத்த எம்.பி.யை பேசும் படி அழைத்தார். அப்போது அவரை தடுத்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலுவை பேச அனுமதிக்கும் படி எழுத்து நின்று கோஷங்களை எழுப்பினர். திமுக எம்.பி.க்களை அமரும் படி எச்சரித்த ஓம் பிர்லா துளிகூட அவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அவையை தொடர்ந்து நடத்தி கெத்து காட்டிவிட்டார்.