World

இந்தியாவில் எங்குசெல்ல ஆசை என மோடி கேட்டார் நா தமிழ்நாடு என சொல்ல... போடு போடு உலக இந்துக்களின் தலைவராக மோடி!

rome visit
rome visit

பிரதமர் மோடி போப்பை சந்தித்ததைத் தொடர்ந்து, வாட்டிகன் நகரிலிருந்து புறப்பட்டு சென்றார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பிரதமருடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். போப்பை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


பிரதமர் மோடி போப் இடையேயான  சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக  நீண்டது. போப் உடனான சந்திப்பு குறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது "போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பலதரப்பட்ட பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தேன்" என பதிவிட்டுள்ளார்.

கரோனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இத்தாலி நாட்டு உயர் மட்ட அலுவலர்கள் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில், மோடி போப் ஆகியோர் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் அழைப்பின்பேரில் ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்தவற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரோமுக்கு சென்றுள்ளார்.

பின்னர், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ செல்கிறார். வெள்ளிக்கிழமை இத்தாலி தலைநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இப்படி அரசு முறை பயணங்கள் இருக்க இடை இடையே பிரதமர் மோடியை சந்திக்க ரோம் நகரில் வசிக்கும் இந்துக்களும், இந்தியர்களும் குவிந்து வருகின்றனர், இந்திய இந்துக்களை தாண்டி இத்தாலி நாட்டை சேர்ந்த சிறுபான்மை இந்துக்கள் மோடியை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கின்றனர், இந்த சூழலில், இத்தாலியை பூர்வீகமாக கொண்ட ஹிந்து சந்யாசினி..இவர் பெயர் சுவாமினி அம்சானந்த கிரி,இத்தாலி சநாதன தர்மசங்கத்தின் தலைமையாக உள்ளார்.

பிரதமர் மோடி உங்களிடம் என்ன பேசினார் என பத்திரிகையாளர் கேட்டார் அதற்கு அம்சாநந்தா கிரி கூறியதாவது உங்களுக்கு இந்தியாவில் பிடித்தது என்ன? எங்கே போக விரும்புகிறீர்கள் என்று கேட்டார் ,நான் தமிழ்நாடு என்று சொன்னவுடன் என்னிடம் தமிழில் பேசினார் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமராக மோடி பொறுப்பேற்று வெளிநாடுகளுக்கு அரசுமுறை சுற்றுபயணம் மேற்கொண்ட போது அங்கு இந்தியர்கள் குவிந்து பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த சூழலில் இப்போது வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டு இந்து மதத்திற்கு மாறிய மக்களும் மோடியை சந்திக்க ஆர்வமுடன் படையெடுத்து இருப்பது உலக இந்துக்களின் தலைவராக மோடி உருவாகிவிட்டார் விட்டார் என்றே சொல்லலாம். பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து  அம்சானந்த கிரி,மகிழ்ச்சியுடன் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.