இந்திய பிரதமர் மோடி இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை சந்தித்தார், இருதரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிற்காக இத்தாலி சென்றிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியுடன் முதன்முறையாக நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியப் பிரதமரை சிறப்பு செய்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது. இரு தரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்துள்ள இந்த டிவிட்டர் செய்தியில்,
"இந்தியா-இத்தாலி கூட்டாண்மையை ஒருங்கிணைக்கும் வகையில் இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, இரு தலைவர்களும் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தக பங்காளிகளில் இத்தாலியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய இறக்குமதியின் பூர்வீக நாடாக, 1.2 சதவீதத்துடன் இந்தியா 19 வது இடத்தில் உள்ளது,
ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலக்கட்டத்தில் 3.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான அந்நிய நேரடி முதலீட்டில் இத்தாலி 18வது இடத்தில் உள்ளது.வெள்ளிக்கிழமை ரோம் வந்தடைந்த இந்தியப் பிரதமரை இத்தாலி அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் இத்தாலியில் உள்ள இந்தியத் தூதர் வரவேற்றனர்.
இத்தாலிக்கு சென்ற பிரதமர் மோடி "முக்கிய உலகளாவிய பிரச்சினைகளை விவாதிக்கும் முக்கியமான மன்றமான ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றடைந்தார் . இந்த பயணத்தை உலகில் இந்தியாவை வஞ்சம் தீர்க்க காத்திருந்த நாடுகளுக்கு மிக பெரிய பதிலடியை தனது செயல்கள் மூலம் கொடுத்துள்ளார் மோடி . இந்தியாவின் சொந்த கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை இது வரை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கவில்லை .
இதற்கு மருத்துவ துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் அழுத்தமே என்று வெளிப்படையாக தெரிந்த சூழலில்தான் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் , இங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க பிரதமர் மோடி முக கவசம் இன்றி தனது நாட்டின் சொந்த தயாரிப்பான கோவாக்சின் பலம் குறித்து உலக நாடுகளுக்கு மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் .
உலக சுகாதார அமைப்பு எங்கள் நாட்டின் சொந்த தயாரிப்பான கோவாக்சினை அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன இதோ பார் எனது நாட்டின் பலத்தை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி தைரியமாக இருக்கிறேன் , எங்கள் சொந்த தயாரிப்பின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என தெளிவுபடுத்தி இருக்கிறார் என உலக வாக்சின் அரசியலை உற்று கவனித்துவரும் நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
இதுவரை இந்திய பிரதமர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றால் ஆங்கிலத்தில் உரையாற்றுவதையே வழக்கமாக கொண்டிருந்த சூழலில் இந்திய மொழியான இந்தியில் பேசும் வழக்கத்தை அறிமுகபடுத்தியவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் மற்ற சில உலக தலைவர்களும் முக கவசம் இன்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.