24 special

மோடி வெச்சாரு பாரு ஆப்பு...! இப்போதே கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்..!

Rahul gandhi, modi,  aravind kejarwal
Rahul gandhi, modi, aravind kejarwal

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் வெற்றி பெற்று விட்டால், மோடியின் செல்வாக்கை சரித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாஜகவின் பரமவைரிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் அத்மி கட்சியும் தன் முழு பலத்தையும் காட்டி குஜராத்தில் பிரச்சாரம் செய்தனர்.  


ஒருபுறம் ராகுலின் அகில இந்திய நடைப்பயணம் மிகப்பெரிய எழுச்சி என்ற பிம்பத்தை காட்டியும், மறுபுறம் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மக்களிடம் தன் வழக்கமான மாயையைக் காட்டியும் பிரச்சாரம் செய்தாலும், குஜராத் தேர்தலுக்குப் பின் எடுத்த  பல ஊடக கணிப்புகள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் கனவுகளை தவிடு பொடி ஆக்கியுள்ளது .

அகில உலக இந்தியர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்த குஜராத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று பாஜகவினர் சொல்லி வந்தாலும், குஜராத்தில் தேர்தலில் வென்றால் மோடியையே வென்றதாக நினைத்துக் கொண்டு,  நாங்கள் இந்த முறை குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின்  பிம்பத்தை உடைப்போம் என்று இரு கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர் இந்நிலையில்

182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஒன்றாம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவ நடைபெற்று 63.31 சதவீதம் வாக்குகள் பதிவும்  நேற்று இரண்டாம் கட்ட நடந்து முடிந்தது. 

93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில், 59 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 61 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பங்கேற்றனர்.  பல ஊடகங்களில் தற்பொழுது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு  வெளியாகியுள்ளது. அதில் பெரும்பாலானவை பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளது , காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு பேரிடியாக உள்ளது.

ரிபப்ளிக் - பி மார்க் நிறுவனத்தின் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மிக்கு இரண்டு முதல் 10 இடங்களும் கிடைக்கும் எனவும்,  டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு படி பாரதிய ஜனதாவிற்கு 131 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களும், ஆம் ஆத்மிக்கு ஆறு இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சி-வேட்டர் கருத்துக்கணிப்பின் படி, பாஜகவிற்கு 128 முதல் 140 இடங்களும், காங்கிரஸுக்கு 31 முதல் 48 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 3 முதல் 11 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, பாஜகவிற்கு 117 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கட்சி 34 முதல் 51 இடங்களையும், ஆம் ஆத்மி 5 முதல் 13 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ் கருத்துக் கணிப்பின் படி குஜராத்தில் பாஜகவிற்கு அதிகபட்சமாக 49% வாக்குகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 முதல் 32 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு அதிகபட்சமாக 19% வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவினர் இது எதிர்பார்த்த முடிவு தான், கருத்துக் கணிப்புகளை விட இன்னும் அதிக இடங்களை  பெறுவோம் எனக் கூறுகின்றனர். பல மூத்த ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர்களும் ஆமோதிக்கின்றனர்.

 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக குஜராத்தை வென்று மோடியை வென்று விடலாம் என்று கணக்கு போட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக, பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று NDTV இன் கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஆத்மி கட்சிக்கு ஒரே ஆறுதலாக இருப்பது டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் என்பதுதான் ஆனால் அங்கும் காங்கிரசுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.

குஜராத் மட்டுமல்லாமல் இமாச்சலிலும் பாஜக இமாலய வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்களால் கனிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இமாச்சலப் பிரதேசத்தில் 35 தொகுதிகளையும், காங்கிரஸ் 30 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு மாநில தேர்தலின் வெற்றி நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுக்கு 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய எழுச்சியாக அமையும் என்றும்,  அதே சமயம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு அவர்கள் ஆளும் மாநிலங்களிலேயே மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும் அரசியல் வல்லுனர்கள் சொல்லி, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்திலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவில் இடங்களைப் பெற்று மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமருவது நிச்சயம் என்று சொல்கின்றனர்.

GokulaKrishnan S