24 special

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலக காரணம் இதுதானாம்..! கசிந்தது அதிர்ச்சி தகவல்!

Suriya annamalai
Suriya annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருக்கிறார், கட்சியின் முக்கியமான நிகழ்ச்சி என்பதால் அது குறித்த விவரங்கள் ஏதும் பொதுவெளியில் வெளிவருவது தவிர்க்கப்பட்டு வருகிறது, இந்த சூழலில் பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா தெரிவித்து இருக்கிறார்.


திருச்சி சூர்யா விலகுவதாக அறிவித்த நிலையில் அவர் தெரிவித்த கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது, பாஜகவில் இருந்து விலகுவதாக தெருவித்த சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில்,

அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சூழலில் சமீப காலமாக தொடர்ச்சியாக பாஜகவில் அதிகார மோதல்கள் நிகழ்வது வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது, பாஜகவில் மாநில தலைமையை தொடர்ச்சியாக விமர்சனம் செய்யும் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து முழுமையாக நீக்க படலாம் என  கூறப்படுகிறது.

பாஜகவில் பல்வேறு பொறுப்புகள் இருந்தாலும் மாநில நிர்வாகிகளாக வருபவர்கள் முழுக்க முழுக்க மாநில தலைவரின் அதிகார வட்டத்திற்குள் வருபவர்கள் அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள சிலர் தொடர்ச்சியாக அண்ணாமலைக்கு எதிராக உள்ளடி அரசியல் செய்து வருவதாகவும் அவர்கள் கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

தற்போது சூர்யா பல்வேறு குற்றசாட்டுக்களை முழுமையாக ஆங்கிலம், ஹிந்தி மொழியில் தெளிவாக பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறாராம், திருச்சி மாவட்டத்தில் அன்பில் மகேஷ் மற்றும் கேஎன் நேருவிற்கு எதிராக அரசியல் செய்பவர்கள் பாஜகவில் குறி வைக்க படுவதாகவும் இதற்கு முழுக்க முழுக்க பாஜகவில் உள்ள சிலரே துணை போவதாகவும் குறிப்பிட்டு தகவல்களை அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து விரைவில் தமிழகம் திரும்பவுள்ள அண்ணாமலை அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அவருக்கு தேசிய தலைமை தடையாக இருக்காது எனவும் உறுதி மொழி கொடுக்கப்பட்டு வருகிறதாம். பாஜக ஒட்டுமொத்தமாக கோஷ்டி பூசலை தவிற்கும் விதமாக விரைவில் பாஜக தேசிய தலைவர் நட்டா சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில்பாஜக ஒரு அணியாக இணைந்து தேர்தலை சந்திக்கும் என கணக்கிட்டால் இப்போது கட்சிக்குள் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தால், பல கருப்பு ஆடுகள் கட்சியில் இருப்பதும் அவர்கள் கலையெடுக்க வேண்டிய சூழல் உண்டாகி இருப்பதும் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.

இவை அனைத்தையும் தாண்டி  டெல்லியில் இருந்து அண்ணாமலை சென்னை திரும்பியதும் பல அதிரடி சம்பவங்கள் காத்து இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.