பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பு இருப்பதாக சில அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கருத்து தெரிவித்துவரும் சூழலில் பஞ்சாப் மாநில தலைநகரை கைப்பற்றி பொய் செய்தி பரப்பி அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளனர் பஞ்சாப் தலைநகர் மக்கள். பாஜக முனிசிபல் கவுன்சிலர் சரப்ஜித் கவுர் சனிக்கிழமை நேரடிப் போட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் அஞ்சு கத்யாலை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, புதிய சண்டிகர் மாநகராட்சி மேயரானார். மொத்தமுள்ள 36 வாக்குகளில் 28 வாக்குகள் பதிவான நிலையில், 7 காங்கிரஸ் கவுன்சிலர்களும், சிரோமணி அகாலிதளம் கவுன்சிலரும் வாக்களிக்கவில்லை.
கவுர் 14 வாக்குகளைப் பெற்றார், கத்யால் 13 வாக்குகளைப் பெற்றார், மேலும் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவு வெளியானதும், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் சபையில் சலசலப்பை ஏற்படுத்தினர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் வரவழைக்கப்பட்டனர். டிசம்பர் 27 அன்று அறிவிக்கப்பட்ட சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் முடிவுகள், 35 வார்டுகளில் ஆம் ஆத்மி 14 இடங்களிலும், பிஜேபி 12 இடங்களிலும் வெற்றி பெற்று தொங்கு மேயர் தேர்தலை உருவாக்கியது. காங்கிரஸ் 8 இடங்களையும், சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், காங்கிரசை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஹர்பிரீத் கவுர் பாப்லா, பாஜகவில் இணைந்தார். 35 கவுன்சிலர்களைத் தவிர, முனிசிபல் கார்ப்பரேஷனில் முன்னாள் அலுவல் உறுப்பினராக இருக்கும் சண்டிகர் எம்.பி.க்கும் வாக்குரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜக மீது வெறுப்பு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் உண்மையில் பாஜகவிற்கு ஆதரவாக பஞ்சாப் மக்கள் திரண்டு இருப்பதும், இந்தியாவிற்கு ஆதரவாகவே சீக்கியர்கள் இருப்பார்கள் என்ற செய்தியும் இதன் மூலம் நாட்டிற்கு தெரியவந்துள்ளதாக பஞ்சாப் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.