மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக பாஜகவிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் இதனை திசை மாற்றி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
அகில இந்திய ஒதுக்கீட்டில் PG மருத்துவ மாணவர்களுக்கு 27% OBC இட ஒதுக்கீடு செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.மோடி அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினையை நான் ஆரம்பத்திலேயே நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்திய திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!சமூக நீதியை பாதுகாப்போம், சமூக நீதிக்கு எதிரான பாஜகவை தோலுரிப்போம் என குறிப்பிட்டார் ஜோதிமணி.
இந்த சூழலில் ஜோதிமணி கருத்தை மேற்கோள் காட்டி எழுத்தாளர் சுந்தர ராஜ சோழன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :- 1952 - 2014 வரை பெரும்பங்கு இந்தியாவை ஆண்டது காங்கிரஸ்தான்.. ஆனால் மண்டல் கமிஷனை அமைத்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு.அதை அறிமுகப்படுத்தியது பாஜக ஆதரவுடன் ஆட்சியிலிருந்த விபிசிங் அரசு..அதை செயல்படுத்தியது இன்று சோனியா காந்தி குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நரசிம்மராவ்..
இத்தனை வருடத்தில் OBC ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கிகாரத்தை காங்கிரஸ் அரசு கொடுத்ததில்லை..மண்டலலுக்கு ஆதரவாகவோ? அல்லது அதை உள்வாங்கவோ கூட இல்லை இதுவரை காங்கிரஸில்..இந்தியாவின் இணையற்ற OBC பிரதமரான மோடியை பாஜகதான்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல கல்யாண்சிங்,சௌகான் என்று OBC தலைவர்களை பிரதமர்களை வட இந்தியாவில் உருவாக்கி எழுச்சி பெற வைத்ததும் பாஜகதான்..
இன்று OBC ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரமும்,27% AIQ வில் இடஒதுக்கீடும் கொடுத்தது மோடி தலைமையிலான பாஜக அரசுதான்..2004 - 2014 வரை காங்கிரசும்,அதன் கூட்டணி திமுகவும் இதை செய்யவில்லை. நம்ம ஜோதிமணி அக்கா அகில இந்திய காமெடி செய்கிறார்கள். என குறிப்பிட்டுள்ளார் சுந்தர ராஜ சோழன். இவரது கருத்தை பகிர்ந்து பலரும் அகில இந்திய காமெடி பீஸ் ஜோதிமணி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.