பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் பீகார் மாநில முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் இளையமகனுமான தேஜாஸ்வி யாதவ் தனது பள்ளி தோழியை காதல் திருமணம் செய்துள்ளார், அவரது திருமணம் எந்த வித சிறப்பு விருந்தினர்களும் உறவினர்களும் அழைக்கப்படாமல் எளிமையான முறையில் நடைபெற்று இருந்தது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் தேஜாஸ்வி யாதவ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்கும் யாதவர் இல்லாத வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததற்கும் அவரது தாய்மாமா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவின் தாய் மாமா சாது யாதவ், தனது முன்னாள் பள்ளித் தோழியான ரேச்சல் கோடின்ஹோவுடன் சமூகத்துக்கு இடையேயான திருமணம் தொடர்பாக தனது மருமகனை வெள்ளிக்கிழமையன்று கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னாள் கோபால்கஞ்ச் எம்.பி.யான சாது யாதவ், “வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் இமேஜை அவர் இழிவுபடுத்தியுள்ளார். பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைக்கப்படுவதற்கு அவர் தகுதியற்றவர்.
“குடும்பத்திலும் கட்சியிலும் எதேச்சதிகாரம் செய்கிறார். அவர் நம்மை ஆள விரும்புகிறார். அவ்வாறு செய்வதற்கு நாம் அவரை அனுமதிக்க முடியாது. அவரை புறக்கணிப்போம். நாங்கள் அவருக்கு பாடம் கற்பிப்போம், ”என்று சாது யாதவ் கூறினார். திருமணத்தில் கலந்து கொண்ட லாலு பிரசாத்தின் பழைய உதவியாளர் பிரேம் குப்தா ஒரு "ஊழல் நபர்" என்றும் அவர் கூறினார். "உண்மையில் திருமணத்தில் பங்கேற்ற அனைத்து அழைக்கப்பட்ட நபர்களும் ஊழல்வாதிகள்," என்று அவர் கூறினார்.
தேஜஸ்வி யாதவ், ரேச்சல் கோடின்ஹோவை தெற்கு டெல்லியின் சைனிக் பண்ணை பகுதியில் கடந்த வியாழன் அன்ற நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு குறைந்த நபர்களையே அழைத்துள்ளார். ஆர்ஜேடியின் பீகார் தலைவர் ஜெகதானந்த் சிங் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.