நிலை மறந்தவன் திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது, ஆன்லைனில் இப்போதே புக்கிங் தொடங்கிவிட்டன, இந்த சூழலில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனக் தேர்வு செய்யப்படலாம் என்ற செய்தி வெளியாகி வருகிறது.
இதனை முன்னிட்டு சுனக் குறித்து சுந்தர் ராஜ சோழன் எழுதிய கருத்துக்கள் பின்வருமாறு : பிரிட்டிஷின் அடுத்த பிரதமராக வர வாய்ப்பிருக்கிற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரிஷி சுனக்.இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மருமகன்..
சுனக்கின் குடும்பம் கிழக்கு ஆப்பிரிக்கா,கென்யா என்று பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் பணிபுரிந்து ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ்ந்த குடியாகவே அங்கே குடியேறியவர்கள்.இவர்களுடைய பூர்வீகம் பஞ்சாப் மாகாணம் என சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும்,அவர் பூசி மெழுகாமல் தன்னை ஹிந்து என்கிறார்.ஏற்கனவே, நிதியமைச்சராக பதவியேற்கும் போது பகவத்கீதையின் மேலேதான் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளார்."நான் பெருமைமிகு ஹிந்து,பிரிட்டிஷ் எனது கர்மபூமி என்றாலும்,எனது புண்ணிய பூமி இந்தியாவாகும்" என அழுத்தம் திருத்தமாக பதிய வைத்துள்ளார் சுனக்..
சொந்த மண்ணிலேயே அடையாள அழிப்பில் ஈடுபடும் ஹிந்துக்களோடு ஒப்பிடும் போதும் சுனக் உயர்ந்து நிற்கிறார். மிகப்பெரிய உயரத்திற்கு போனாலும்,அங்கே போய் செக்குலர் வேஷமோ,மதமாற்ற வேஷமோ போடாமல் தன்னை பெருமைமிகு ஹிந்து என்றும் தன்னுடைய கலாச்சார ஆணிவேர் இந்தியாவில் உள்ளதென்றும் சொல்கிற தெளிவு பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ நாடாக அறியப்படும் இங்கிலாந்து நாட்டில் ஒரு இந்தியன் இந்திய கலாசார படி உயர்ந்து இருக்கும் சூழலில், இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து வரும் மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் தங்கள் நிலைய மறந்து வாழ்வது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
சுனக் போன்ற நிலை மறக்காதவர்கள் வாழும் இந்த உலகத்தில்தான் மோகன் சி லாசரஸ் போன்ற நிலையை மறந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.