நகர்புற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கவுன்சிலர்களை விலை பேச பண பலம் படைத்த ஆளும் அமைச்சர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில் நிலைமை அப்படியே தலை கீழாக மாறியுள்ளது இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட பெரும் அதிர்ச்சியே அறிவாலயத்தில் ஏற்பட்டுள்ளது.
பாஜக கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவது நடக்காத காரியம் அனைவரும் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு நிற்கின்றனர், அதிமுக கவுன்சிலர்கள் எளிதில் திமுகவில் இணைகின்றனர் சிவகாசியில் கூட ஏறத்தாழ 90% அதிமுக கவுன்சிலர்கள் இணைந்துவிட்டனர் ஆனால் பாஜகவினர் நமக்கே அதிர்ச்சி கொடுக்கின்றனர், நமது கூட்டணி கட்சி கவுன்சிலர்களை அவர்கள் தூக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 4 வார்டுகளில் பாஜகவும், 3 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் நாமும் , 4 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்களும், 1 வார்டில் காங்கிரஸ் கவுன்சிலரும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற மல்லிகா என்ற பெண் கவுன்சிலர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தலைமறைவானார். இதனையடுத்து, கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் கவுன்சிலர் வருகையை எதிர்பார்த்து நாம் காத்து இருந்தோம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அனைவரும் திரண்டு இருந்தோம்
அப்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் புடைசூழ 4 பாஜக கவுன்சிலரும், 3 அதிமுக கவுன்சிலரும் அவர்களுடன் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மல்லிகாவும் வந்தார்.இதனால், பேரூராட்சி அலுவலகம் முன்பு தகடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கவுன்சிலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட தொடங்கிவிட்டார், நாம் பாஜக கவுன்சிலர்களை தூக்க நினைத்தால் அவர்கள் நமது ஆட்களை தூக்க நினைக்கிறார்கள் இது ஒரு சாம்பிள் தான் இது போல் தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது, பாஜக சித்தாந்த ரீதியாக கால் பதித்து விட்டது பணம் பொருள் போன்ற எந்த ஆசைக்கும் அவர்கள் இறங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் முதல்வர் ஸ்டாலின் சற்று மிரண்டுதான் போயிருக்கிறாராம், பாஜக கவுன்சிலர்கள் விலைக்கு மாறாத சம்பவம் மற்ற கட்சிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தான் பாஜகவின் உண்மையான பலம் என்கின்றனர் அக்கட்சியின் வரலாறு அறிந்தவர்கள்.
(இது TNNEWS24 தளத்தின் பிரத்தியேக செய்தியாகும் )
more watch videos