Tamilnadu

போடு கெத்து காட்டிய பாஜக "பெண் கவுன்சிலர்".. எது நடக்க கூடாது என கதறினார்களோ அது நடந்தே விட்டது !

Bjp
Bjp

தேர்தலின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கும் விழா, 648 இடங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,373 கவுன்சிலர்கள்; 138 நகராட்சிகளில் 3,842 கவுன்சிலர்கள்; 489 பேரூராட்சிகளில் 7,604 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்று வருகின்றனர்.ஆணையர்கள் இவர்களுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கின்றனர்.


இதற்காக, 648 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு பின் பதவி ஏற்பு விழா நடப்பதால், சில இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும், மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் முன்னிலையில், புதிய கவுன்சிலர்கள் பதவி பிரமாணம் எடுக்க உள்ளனர்.

இதை தொடர்ந்து, 4ம் தேதி காலை 9:30 மணிக்கு மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கஉள்ளது. பிற்பகல் 2:30 மணிக்கு துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழலில் வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற பாஜக பெண் கவுன்சிலர் பதவி ஏற்று கொண்டார்.

பதவியேற்பின் போது பாரத அன்னையின் புகழ் ஓங்குக என்றும் ஜெய் ஹிந்த் என மூன்று முறை உரக்க கூறி பதவி எற்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டசபையில் ஜெய் ஹிந்த் என இருக்க கூடாது என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்,இந்த சூழலில் தற்போது மாநிலம் முழுவதும் ஜெய் ஹிந்த் ஒழிக்க வைத்துள்ளனர் பாஜக கவுன்சிலர்கள்.

எந்த ஜெய் ஹிந்த் வார்த்தை இருக்க கூடாது என ஆளுநர் உரை திருத்த பட்டதோ தற்போது அதே ஜெய் ஹிந்த் வார்த்தையை மாநகராட்சி வரை கொண்டு சேர்த்துள்ளது பாஜக.