மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவமே தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட மற்றொரு சம்பவம் எடப்பாடி பழனிசாமியை மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆர்ப்பாட்டம், கண்டனச் சுவரொட்டிகள், விமான நிலையத்தில் கோஷம் எனப் பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பும், இன்னொரு பக்கம் விமான நிலையம் ஆதரவாளர்கள் வரவேற்பு என்று பரபரப்பை ஏற்படுத்தியது எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய தென் மாவட்ட பயணம்.
எடப்பாடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய வாசலுக்கு வர இணைப்புப் பேருந்தில் எடப்பாடி பழனிசாமி வந்து கொண்டிருந்தபோது அதில் வந்துகொண்டிருந்த பயணி ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்தபடியே 'துரோகியுடன் பயணம் செய்கிறேன், சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்’ என கோஷமிட்டபடி முகநூலில் பதிவேற்றி இருந்தார்.
இதை எடப்பாடி பழனிசாமி பார்த்து அதிர்ச்சியடைய, உடன் வந்த பாதுகாவலர், மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் அந்த நபரிடமிருந்து செல்போனைக் கைப்பற்றினார்கள்.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது ஒருபுறம் முடிந்து எடப்பாடி மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி நகர சிவகங்கைக்குள் வராதே' என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்களால் மாவட்டம் முழுக்க எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்க, சிவகங்கையில் ஓ.பி.எஸ் அணியினரும், திருப்பத்தூரில் வேறு சில அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் எடப்பாடியை வரவேற்க சிவகங்கை முழுவதும் வைக்கப்பட்ட போஸ்டர்கள் பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி நடத்திய பொது கூட்டத்திற்கு போட்டியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டிய போட்டி பொது கூட்டத்திற்கு ஆட்கள் அதிக அளவில் அழைத்து வரப்பட்டதால் இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் உண்டாகும் வண்ணம் சூழல் இருந்தது.போலீசார் தலையிட்டு முதலில் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்தனர், இந்த பஞ்சாயத்து முடிந்து திருப்பத்தூரில் அமைந்து இருக்கின்ற மருது பாண்டியர் நினைவு இடத்தில் மரியாதை செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அங்கும் மிக பெரிய எதிர்ப்பு கிளம்பியது,
மருது பாண்டியர் வாரிசுகளை அனுமதிக்காமல் எப்படி செல்லலாம் என எதிர்ப்பு எழ கைகளப்பு ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரண்டு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.இப்படி எடப்பாடி பழனிசாமியின் தென் மாவட்ட பயணம் முழுவதும் தொடக்கம் முதல் முடிவு வரை கடும் எதிர்ப்பிலேயே முடிந்து இருக்கிறது, ஒரே ஒரு இடை தேர்தல் தென் மாவட்டத்தில் உண்டானால் எடப்பாடி பழனிசாமியின் உண்மையான பலம் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என அடித்து கூறுகின்றனர் தென் தமிழக மக்கள்.