நேற்றைய தினம் தமிழகத்தின் 12 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதாவது தமிழகத்தில் சென்னை திருச்சி புதுக்கோட்டை கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைகளில் தமிழகத்தில் நடவடிக்கைகள் நடந்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சோதனையில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அப்துல் கான் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனையானது மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவருக்கும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாகவும் என்ஐஏ தரப்பிற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நபர்கள் வீட்டில் தான் தற்போது சோதனை நடைபெற்றுள்ளது. மேலும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்காக தமிழகத்தில் இருந்து புதிதாக ஆட்களை சேர்த்துள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து ஆட்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையிலேயே என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை இட்ட இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர், கிலாஃபா, இஸ்லாமிய அரசு மற்றும் முன்மொழியப்பட்ட கிலாஃபா அரசாங்கம் மற்றும் அதன் நிதி அமைப்புகளின் சித்தாந்தத்தை கோடிட்டுக் காட்டும் புத்தகங்கள் மற்றும் அச்சுப் பிரதிகள் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோட்டில் இரண்டு வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெரியார் நகர் கருப்புசாமி தெருவில் 40 வயது மெக்கானிக் முகமது ஈசாக் என்பவர் வீட்டில் கொச்சினில் இருந்து வந்த குழுவினர், மொபைல் போன் மற்றும் இரண்டு பென் டிரைவ்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஷர்புதீன் என்பவர் என் ஐ ஏ அலுவலகத்திற்கு ஆஜராகும் படியும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த நபர்கள் தமிழகத்தில் உலா வந்துள்ளதும் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது திமுக அறிவாலயத்திற்கு மற்றொரு பேரிடியாக விழுந்துள்ளது. இதனால் இன்னும் இந்த திமுக ஆட்சி முடிவதற்குள் தமிழகத்தில் என்னென்ன சட்ட விரோதமான செயல்கள் அரங்கேற போகிறது என்பது தெரியவில்லை என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தேசிய புலனாய்வு ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும், அந்த ஆவணங்களை மையமாக வைத்து இன்னும் பல ரெய்டுகள் தமிழகத்தில் அரங்கேறலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன...
மேலும் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் சில அமைப்புகளின் நடமாட்டத்தை கங்காணித்து வருகிறது, இதுமட்டுமில்லாமல் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் குண்டுவெடிப்பு என பல சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக நடைபெறுவதும், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் ஈடுபட்ட நபர்கள் தமிழகத்தில் கைது செய்தது போன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது டெல்லியின் தலைமையால் கண்கணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது என சில அரசியல் விமர்சகர்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.