24 special

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் நடக்க போகும் ஒரு சீக்ரெட்.....!

Annamalai
Annamalai


தமிழக அரசியலை புரட்டி போட மாபெரும் காவி படையுடன் இறங்கும் அண்ணாமலை... பாஜக வைத்திருக்கும் சஸ்பென்ஸ்..
அண்ணாமலை அவர்கள் தலைமையின் கீழ் ஜூலை 28ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு குறிப்பாக 225 ஊர்களுக்கு என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஏற்பாடுகளுக்கு முன்னர் அண்ணாமலை அவர்கள் DMK பைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். எதற்கு இந்த நடைபயணம்? என்று நீங்கள் கேட்டால், ஊழலுக்கு எதிரான ஒரு பயணம் தான் இது தமிழகத்தின் ஒட்டுமொத்த ஊர்களிலும் மக்களை சந்தித்து அவர்களிடம் இருக்கும் குறைகளையும், ஊழல் வாதிகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு ஒரு காட்டும் ஒரு வாய்ப்பாக பாஜக இதை பயன்படுத்த போகிறது என்று ஏற்கனவே அண்ணாமலை அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டு இருந்தது.

ராமேசுவரத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 28 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளாா். "தலைவரின் என் மண் என் மக்கள் யாத்திரையில் இணைவீர், #enmann enmakkal என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பாஜக தரப்பில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது. இந்த பயணம் குறித்து ஏற்கனவே அண்ணாமலை தரப்பில் கூறும் பொழுது, தமிழகம் இழந்த பெருமையை மீட்போம், உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கி நமது மாணவ செல்வங்களின் கற்றல் திறனை உயர்த்துவோம், படிப்புக்கேத்த வேலை, வேலைக்கேத்த ஊதியம், ஊழலற்ற உன்னதமான ஆட்சியுடன் சீரான சட்ட ஒழுங்கையும் உறுதி செய்வோம். இது எனது பயணம் இல்லை, நமது பயணம்! என் மண், என் மக்களுக்கான பயணம் என்று ஆழமான ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தார்.

ஏற்கனவே பாதயாத்திரை தொடர்பான செய்திகள் வெளியாகி விட்டது. 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். பாதயாத்திரை தொடங்கிய 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். அதன்படி ராமநாதபுரத்தில் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். 31ஆம் தேதி சிவகங்கை செல்லும் அண்ணாமலை மானாமதுரை, திருப்பத்தூர் திருமயம் வழியாக ஆகஸ்ட் 3ஆம் தேதி காரைக்குடி செல்கிறார். பின்னர் மதுரை மாவட்டத்தில் 4, 5ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் அண்ணாமலை 6ஆம் தேதி ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து மதுரையில் 7ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை உரையாற்றுகிறார். பின்னர் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 14ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அண்ணாமலை அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கெடுக்க பல லட்சம் போ் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிலிருந்து ராமேசுவரத்துக்கு வர உள்ளனா். ராமேசுவரம் மண் தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மட்டும் ஒரு லட்சம் போ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனா். இந்த யாத்திரை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக என் மண், என் மக்கள் யாத்திரை அமையும். 2024, 2026 தேர்தல்களில் யாத்திரையின் தாக்கம் பிரதிபலிக்கும். புதிய அரசியல் மாற்றத்தை முன் எடுக்கும் அண்ணாமலை அவர்களின் இந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை காரணமாக தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!