சிறையில் இருந்து வெளிவந்த கனல் கண்ணன் கொடுத்த பேட்டி தற்போது ஆளும் கட்சியான திமுகவையும் குறிப்பாக அமைச்சர் மனோ தங்கராஜ்ஜயும் கடும் அதிர்ப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் அவரது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடை அணிந்து வெளிநாட்டை சேர்ந்த ஒரு நடிகர் இளம்பெண்ணுடன் நடனமாடும் காட்சிகள் இருந்தன. அந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு இருந்தது.இந்த வீடியோ காட்சி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி திட்டுவிளையை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜின் ஆதரவாளர் திமுகவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தநிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக கனல் கண்ணன் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆஜரான நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவரை பாளையங்கோட்டை மத்திய சிறை சாலையில் அடைத்தனர்.இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து கனல் கண்ணன் ஜாமினில் வெளியே வந்தார். அவரை நெல்லை, குமரி மாவட்ட இந்து முன்னணியினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
வெளியே வந்த கனல் கண்ணன் கூறும் போது, தான் அணிந்து சென்ற சட்டை கசங்காமல் வெளியே வந்து இருப்பதாகவும் நான் எனது கலாசாரம் குறித்து விளக்கம் கொடுத்தேன் அது இந்த திராவிட மாடல் அரசிற்கு பிடிக்கவில்லை, வெறும் 5 ஆயிரம் பேர் பார்த்த வீடியோவை இப்போது 2 மில்லியன் பேர் பார்க்க வைத்து இருக்கிறார்கள் நன்றி என ஒரே போடாக போட்டார் மேலும் மில்க் மேனேஜர் என அமைச்சர் மனோ தங்கராஜயும் சைடு கேப்பில் கனல் கண்ணன் கிண்டல் செய்தார்.
கனல் கண்ணனை சிறையில் வைத்தால் அமைதியாக இருப்பார் என திமுகவினர் கணக்கு போட்ட நிலையில் எதற்கும் அஞ்ச போவது இல்லை எனது மதத்தை காக்க எனது கலாசாரத்தை காக்க அனைத்து எல்லைக்கும் செல்வேன் என கனல் கண்ணன் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் கொடுத்த பேட்டி பல்வேறு கணக்கு போட்டு இருந்த திமுக ஆதரவாளர்களை அதிர செய்து இருக்கிறது.
மில்க் மேனேஜர் என கனல் கண்ணன் வைத்த புதிய பெயர் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பு புலம்பி வருகிறதாம்.