தமிழ் திரையுலகில் திரைப்பட இயக்குனராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் தனது பணியினை சிறப்பாக ஆற்றி வரும் பிரபலமான இயக்குனர் தான் ஏ ஆர் முருகதாஸ்!! இவர் இயக்கம் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை கண் முன்னாடி கதையாக காட்டும் படி அமைந்திருக்கும். சமூக பிரச்சனைகளை தட்டிக் கேட்கும் விதமாகவும், அதற்கு தீர்வு கூறும் விதமாகவும் இவரின் திரைப்படங்கள் எப்போதுமே அமைந்திருப்பது தனி சிறப்பாகும். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகத்திலும் பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் 1997 ஆம் ஆண்டு ராட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவுடன் சேர்ந்து குஷி திரைப்படத்திற்காகவும் சிறப்பாக பணியாற்றி வந்தார். இதன் தொடர்ச்சியாக ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் சூர்யாவை வைத்து இயக்கினார். இவ்வாறு பல வெற்றிகரமான திரைப்படங்களை தமிழ் சினிமா உலகிற்கு தொடர்ந்து கொடுத்து வரும் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய இயக்கத்தில் வெளியிட்ட திரைப்படத்தில் அமைந்திருந்த டெலிட் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் சினிமா உலகினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அது எந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி என்பதை பற்றியும், அதில் யார் நடித்தார் மற்றும் எந்த மாதிரியான காட்சி அமைந்துள்ளது என்பது பற்றியும் விரிவாக காணலாம்!!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படங்களில் துப்பாக்கி என்னும் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சி தான் அது!! இந்த துப்பாக்கி திரைப்படம் மனது கடந்த 2012 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான ஆக்சன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து விஜய் சண்டையிடும் காட்சிகள் சூப்பர் ஹிட் ஆகவே அமைந்திருந்தது. மேலும் காதல் மற்றும் ஆக்சன் காமெடி போன்ற அனைத்துமே இந்த திரைப்படத்தில் சூப்பராகவே இடம்பெற்றிருந்தது. எனவே அதிக அளவில் ரசிகர்களும் பொதுமக்களும் இந்த திரைப்படத்தை வரவேற்க ஆரம்பித்தனர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் சந்தோஷ் சிவனும் இணைந்து பணியாற்றியுள்ளார். நல்ல வரவேற்பு தமிழகத்தில் இந்த திரைப்படம் பெற்று வந்தாலும் கூட இஸ்லாமிய விளிம்பு நிலை குழுக்களின் எதிர்ப்புகளும், பல சர்ச்சைகளும் இந்த திரைப்படத்தின் போது எழுந்து வந்தது. வெளியான பத்து நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டிய திரைப்படங்களின் வரிசையில் இதுவும் இடம் பெற்று இருந்தது. மேலும் துப்பாக்கி திரைப்படம் ஆனது பாக்ஸ் ஆபீஸில் 180 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனது. இந்த நிலையில் துப்பாக்கி திரைப்படத்தில் கேப்டன் ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்த ஒரு காட்சி இந்த திரைப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்டது.
அந்தக் காட்சியில் நடிகர் விஜய் கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களின் வாழைப்பழ காமெடியை மும்பை போலீஸிடம் செய்வது போல அமைந்திருந்தது. அந்த வீடியோவை தற்பொழுது ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டு கவுண்டமணி செந்தில் எபிக் காமெடி என்றும், துப்பாக்கியில் இருந்து நீக்கப்பட்ட காட்சி என்றும் பதிவிட்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது வைரலாவது தொடர்ந்து விஜயின் ரசிகர்களுக்கும், சினிமா துறையில் உள்ளவர்களுக்கும் இந்த சீனை போய் டெலிட் பண்ணிட்டீங்களே அப்படின்னு நினைக்கும் அளவிற்கு தொடர்ந்து கமெண்ட்கள் எழுந்து வருகிறது.