தமிழன் என்று அழைத்து கொள்வதைதான் நான் மிகவும் பெருமையாக எடுத்து கொள்வதாகவும். தான் ஒரு பச்சை தமிழன் என பல மேடைகளில் முழங்கியவர் நடிகர் சத்யராஜ் மேலும் பல மொழிகள் குறித்தும் சர்ச்சையாக விமர்சனம் செய்துள்ளார் அதிலும் காவிரி பிரச்சனை போது கன்னட அரசை கண்டித்து சத்யராஜ் பேசியது இன்று வரை தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று என்ன என அவரது ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்தி.
ஆனால் news18 ஊடகத்தின் ஆங்கில பதிப்பு பழம்பெரும் தெலுங்கு நடிகர் சத்யராஜ் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது, தமிழ் நடிகரான சத்யராஜை தெலுங்கு நடிகர் என அந்த ஊடகத்தின் வலைத்தள. செய்தி குறிப்பிட்டுள்ளது இது குறித்து அதில் இடம்பெற்ற தகவல்கள் பின்வருமாறு :-
பழம்பெரும் தெலுங்கு நடிகர் சத்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஜனவரி 7 மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் நடிகர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார்.
பாகுபலி புகழ் நடிகரின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது. அறிக்கைகளின்படி, சத்யராஜ் தீவிர அறிகுறிகளை வெளிப்படுத்தியதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இந்த தகவலால் ரசிகர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர், ஆனால் அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறார்கள். கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகின் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகேஷ் பாபு, மஞ்சு மனோஜ், மஞ்சு லட்சுமி, இசையமைப்பாளர் தமன், நிதினின் மனைவியும் நடிகருமான விஷ்வக் சென் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என NEWS18 செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ் நடிகரான சத்யராஜை தெலுங்கு நடிகர் என குறிப்பிட்டு news18 ஊடகம் வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். மொத்தத்தில் தமிழ் தமிழ் என தான் காப்பாற்றிய தமிழ் பற்றை தெலுங்கு நடிகர் என குறிப்பிட்டு ஒரே நாளில் தனியார் ஊடகம் சத்யராஜை தெலுங்கு நடிகராக மாற்றி இருப்பதாக பலரும் கிண்டல் அடிக்க அவரது ரசிகர்கள் அனுதாபிகள் சத்யராஜ் தமிழ் திரையுலகை சேர்ந்தவர் என தெரியாதா? ரஜினியை தமிழ் நடிகர் என சொல்லும் ஆங்கில ஊடகங்கள் சத்தியராஜை தெலுங்கு நடிகர் என குறிப்பிட்டது தவறு என சத்தியசீலன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.