Tamilnadu

வேதனையை ஒருவர் வெளிப்படுத்தும் போது சிரிச்சா என்னையா அர்த்தம்? காண்டான வீரமணி!

Veeramani
Veeramani

கோவையில் உள்ள பெரியார் சிலை ஒன்றில் செருப்பு மாலை அணிவித்தும் மிளகாய் பொடியை மர்ம நபர்கள் வீசி சென்றதாக புகார் எழுந்துள்ளது இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என கண்டறிந்து கைது செய்யப்படவேண்டும் என பெரியாரிஸ்ட்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது.


குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள் - தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது - கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு - காவல்துறையின் நடைமுறையாகவும் ஆகிவிட்டது.


தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், சமூகநீதியில் நமது முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் - முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு (காவல்துறை முதலமைச்சரின் துறை) குற்றவாளிகள் - அதன் பின்னணியில் இருப்பவர்கள்மீதான நடவடிக்கை - தண்டனையை  சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான் - இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று காவிகள் -  காலிகள் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும் என மிகவும் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் வீரமணி.

வீரமணி இப்படி ஆவேசமாக கருத்து தெரிவிக்க அவரது முகநூல் பக்கத்தில் சிரித்தவர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது 200 நபர்களில் 150 பேர் வீரமணி பதிவை நகைச்சுவை பதிவுபோன்று சிரித்து வைத்துள்ளனர், இது தமிழகத்தில் பெரியாருக்கும் திராவிட கழகத்திற்கும் இருக்கும் ஆதரவு என்ன என்பதை தெளிவுப்படுத்தி இருப்பதாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.