Tamilnadu

எப்படி போராடினியோ அப்படியே வா காவல்துறை ஆர்டர் கதறும் நந்தினி !

nandhini
nandhini

தமிழகத்தில் போராட்டம் போராட்டம் என ஒரு குடும்பமே செயல்படுகிறது என்றால் அது நந்தினி குடும்பத்தை கூறலாம், ஒருகாலத்தில் மது ஒழிப்பு போராளி என வழக்கறிஞர் படிப்பிற்கு படிக்கும் காலத்தில் போராட்டத்தை தொடங்கிய நந்தினி இப்போது குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர்களை விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்துள்ளார்.


இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என ஜனாதிபதியிடம் மனு கொடுக்க போவதாக நந்தினி மற்றும் அவரது தந்தை அமுதன் ஆகியோர் கூறிவிட்டு, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொறுத்து பார்த்த காவல்துறை இவர்களுக்கு இதே வேலையாக போச்சு என இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தது.

வழக்கமாக இருவரையும் கைது செய்துவிட்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் ஆனால் இந்த முறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு போராட்டத்தில் நந்தினி மற்றும் அவரது தந்தை அமுதன் ஈடுபட்ட காரணத்தால் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இருவரையும் ஜாமினில் வெளிவரவும் கடுமையான எதிரிப்பினை காவல்துறை தெரிவிக்க இரண்டு முறை ஜாமீன் மீதான நந்தினி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மூன்றாவது முறையே கிடைத்துள்ளது, அதோடு சென்னைக்கு வந்து கிண்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு கஷ்டமாக உள்ளது எனவே மதுரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என நந்தினி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் காவல்துறையோ மதுரையில் இருந்து சென்னை வந்து போராட தெரியும் சென்னைக்கு வந்து கையெழுத்து போடதெரியாதா எனவும் வெளுத்து விட்டு இருக்கிறது இந்த சூழலில் நந்தினி பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலினும் சேர்ந்து கொண்டு செயல்படுகிறார் எனவும் பிரதமர் மோடியை வீழ்த்தியே தீருவோம் என காவல் நிலைய வாசலில் இருந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் நந்தினி.

இந்நிலையில் எந்த ஆட்சி வந்தாலும் எதிர்பதையே நந்தினி மற்றும் அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் தொழிலாக வைத்துள்ளனர், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என மாதம் ஒருமுறை போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், நந்தினி குடும்பத்தினர் மாவோயிஸ்ட் மறைமுகமா ஆதரவாளராக இருக்கலாம் எனவும் சீனாவின் சித்தாந்தத்தை இங்கு செயல்படுத்த முயற்சிகளை செய்து வருகிறார்கள் இவர்கள் குடும்பத்தினை 'NIA' பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .