என் மூச்சு உள்ளபோதே அன்புமணி கோட்டையில் உட்கார வேண்டும் என்பது என்னுடைய ஆசை என பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நேற்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இணைய வழியில் நடத்தியது பாமக. இந்த கூட்டத்திற்கு ஜிகே மணி தலைமை தாங்கினார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், புதுச்சேரியை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராமதாஸ், நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்வரும் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது. நம்முடைய கட்சி மிகவும் பலமான கட்சி. ஆனால், இப்போது அந்த பலம் எங்கே சென்றது என தெரியவில்லை. 41 ஆண்டுகால உழைப்புக்கு ஒரு மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சியில் யாரும் இருக்க வேண்டாம்.
நம் கட்சியை பொறுத்தவரையில் போட்டி பொறாமை இருக்கவே கூடாது. பல்வேறு நேரங்களில் திமுக மற்றும் அதிமுக விற்கு நாம் உதவி செய்து இருக்கிறோம் .ஒரு கட்சி நம்மை கௌரவமாக வைத்திருக்கிறது மற்றொரு கட்சி கலங்கப் படுத்தி இருக்கு. இனி நாம் வேறு யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம். தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். வீடு வீடாக சென்று பாமகவின் செயல் திட்டங்கள் குறித்தும் பெருமைகள் குறித்து எடுத்துரையுங்கள். இனிமேல் நம் அரசியல் பற்றித்தான் சிந்தனை இருக்கவேண்டும். ஒருநாள் மக்கள் மனம் மாறுவார்கள். என் மூச்சு இருக்கும் போதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என பேசினார்.
தற்போது தமிழகத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி நடத்தினாலும் அதற்கு எதிர்க் கட்சி பாஜகதான் என தலைவராக பதவியேற்ற உடன் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இப்படி ஒரு தருணத்தில் கோவில்கள் திறப்பு குறித்து சர்ச்சை எழுந்தபோது அதிமுகவை காட்டிலும் பாஜக மும்முரமாக செயல்பட்டு வெற்றி கண்டது. எனவே செயல்பாடு அடிப்படையிலும்,
4 எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதும் பாஜகவின் வளர்ச்சியை காண்பிக்கிறது என பொதுவான கருத்து நிலவி வருகிறது, இப்படி ஒரு தருணத்தில் சசிகலா அதிமுக வின் 50 ஆண்டு பொன்விழாவில், கழக செயலாளர் என தன்னுடைய பெயரை கல்வெட்டில் பதித்து உள்ளார். எனவே அதிமுக மீண்டும் எழுச்சி பெறுமா? eps ops மற்றும் சசிகலா ஒன்றிணைவர்களா? என எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது .
இப்படியான ஒரு தருணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களை விரைவில் முதல்வராக்க வேண்டும் என்பதே என் கனவு என குறிப்பிட்டிருப்பது அரசியலில் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.