தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க முன்னணி தயாரிப்பாளர் மற்றும் முக்கிய நடிகர்கள் காத்து இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பு ஏற்றதில் இருந்து பாஜக தமிழக அளவில் ஆளும் கட்சியான திமுகவை தரவுகளுடன் எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் பாஜக மீது சுமத்தப்படும் குற்ற சாட்டுகளுக்கு நேரடியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் கொடுப்பதுடன் மாநில அரசின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார், இந்த சூழலில் அரசியலை தவிர்த்து தமிழ் திரை உலகை சேர்ந்த முன்னணி
தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகளை கூறி புலம்பி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் விநியோகம் செய்த படங்களை காட்டிலும் மூன்று மடங்கு திரைப்படங்களை ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக குற்றசாட்டு எழுந்தது, இதற்கு யூடுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உதயநிதி விளக்கம் கொடுத்தார், என்னை விநியோகம் செய்ய சொல்லி பல தயாரிப்பாளர்கள் வருகிறார்கள், நாங்கள் எங்கும் சென்று படத்தை விநியோகம் செய்ய கொடுக்க வேண்டும் என கட்டாய படுத்தவில்லை என்று கூறினார்.
ஆனால் மாநாடு திரைப்படத்தை வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிம்புவின் குடும்பத்தினர் எத்தனை இக்கட்டை சந்தித்தனர் என்பது டி.ராஜேந்திரன் ஊடகங்களை சந்தித்து, முதல்வர் வீட்டின் முன்பு தர்ணா இருக்க போவதாக அறிவித்ததில் இருந்தே அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் கோடம்பாக்க வட்டாரங்கள்.
இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் வெளியான முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களை இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பெருமளவில் தயாரித்து இருப்பதும் இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் முன்னணி நடிகர்கள் பலர் தமிழ் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இல்லாமல் தெலுங்கு திரை உலகை சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை கொண்டு தங்களது அடுத்த திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்களாம், ஆனால் அதிலும் மிக பெரிய அதிர்ச்சி காத்து இருக்கிறதாம்.
யாரை வைத்து தயாரித்தாலும் நாங்கள்தான் படத்தை வெளியிடுவோம் என அழுத்தம் பிரபல நடிகருக்கு உண்டாகி இருக்கிறதாம், இதையடுத்து இந்த விஷயத்தில் அரசியல் இல்லாமல் எவ்வாறு தீர்வு காண்பது என திரை உலகை சேர்ந்த மூத்த அனுபவசாளிகளிடம் சென்னையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தி இருக்கிறாராம்.
அதில் பலர் பாஜக தரப்பிடம் இந்த விவகாரத்தை கொண்டு செல்லலாம், அண்ணாமலை நிச்சயம் திரை உலகில் நடைபெறும் அரசியல் கணக்குகளை வெளி உலகிற்கு கொண்டு வருவார் எனவும் கூறி இருக்கிறார்கள், இதையடுத்து விரைவில் முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர் அண்ணாமலையை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலை ஏற்கனவே பொழுதுபோக்கு திரைப்படங்கள் குறித்து கருத்து தெரிவித்து விளம்பரத்தை கொடுக்க வேண்டாம் என பாஜகவினருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. விரைவில் அண்ணாமலையை திரை உலகினர் சந்திக்கும் பட்சத்தில் திரை துறையில் அதிரடி மாற்றங்கள் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது.