‘பிரதமர் நரேந்திர மோடி தனித்து வா என்று போஸ்டர் அடித்து அழைப்பிவிடுத்திருக்கும் நெல்லை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள்’.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அண்ணாமலை தலைமை ஏற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை கட்சிக்காக செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல கிராமங்கள், நகரங்கள் போன்ற பல்வேறு இடத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் மற்றும் இளைஞர்களிடையே குறைகளை கேட்டும் வருகிறார். இதனால் பாஜகவின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் அசுரவேகமாக வளர்ந்து வருகிறதாக பல அரசியல் தெரிந்தவர்கள் அவ்வப்போது கூறியும் வருகின்றனர்.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இனிவரும் காலங்களில் பாரதிய ஜனதா கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து போட்டியிட வேண்டும் என்றி தெரிவித்தார்.
மேலும் பாஜக, “திராவிட கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்டால் நான் தலைவர் பொறுப்பை ராஜினாம செய்துவிட்டு, கட்சியின் தொண்டனாகவே செயல்படுவேன்” என்று தனது நிலைப்பாட்டை, கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக டெல்லி மேலிடதிலும் சொல்லி வந்தார். இதையடுத்து தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி கேள்வி குறியாகவே உள்ளது.
இந்நிலையில், 2024-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில், தேவிந்திர குல வேளாளர் சங்கம் சார்பாக சுவரொட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது’. அதில் “எங்கள் நரேந்திர மோடி தனித்து வா, தமிழகத்தில் இருக்கும் 40 தொகுதிகளிலும் தாமரையை மலரச் செய்கிறோம் என்று மோடியின் படத்தையும், அண்ணாமலையின் படத்தையும் போஸ்டர் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்”. இந்த சுவரொட்டி போஸ்டர்களினால் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.