Tamilnadu

சத்குரு பகிர்ந்த "200 ரூபாய்" நாய் "கதை" யாரையோ குறிப்பிட்டு சொல்கிறாரோ நெட்டிசன்கள் கிண்டல்!

sathguru
sathguru

பிரபல ஈஷா நிறுவனரும் ஆன்மீககுருவுமான சத்குரு நாய் ஒன்றை பற்றிய குட்டி கதை ஒன்றை பகிர்ந்து இருக்கிறார், அந்த கதை இணையத்தில் வைரலாகி வருகிறது, இது குறித்து அவர் குறிப்பிட்டது பின்வருமாறு :- பேசும் நாய்!


“பேசும் நாய் விற்கப்படும்”- சங்கரன்பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர்,“நாயைப் பார்க்கணும்” என்றார். “கொல்லைப்பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன், போய்ப் பாரும்!” என்றார் சங்கரன் பிள்ளை. வந்தவர் கொல்லைப்பக்கம் போய் நாயைப் பார்த்து, ”நீ பேசுவியாமே?”என்று கேட்டார். நாயும், “ஆமா, ஆமா!” என்றது.

“உன்னைப்பற்றி சொல்லேன்” என்றார் நாய்ப் பிரியர்.“சின்ன வயசிலயே என்னால் பேசமுடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடுவிட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கள்ல.

எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்ப களைப்பாயிருச்சு. அதனால், விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுகளை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கௌரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறைய குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப்போறேன்” என்றது.

வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர் ‘‘200 ரூபாய்’’ எனச் சொல்ல, “அப்படியா! 200 ரூபாய் தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.

“ஏன்னா, இது நிறைய பொய் பேசும்” என்றார் சங்கரன்பிள்ளை என அவரது சத்குரு தமிழ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார், இந்த கதை உண்மையாக நகைச்சுவை கதை தானா அல்லது,200 ரூபாய் போராளிகள் என ஏற்கனவே நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கும் ஒரு தரப்பை சத்குரு குறியீடு மூலம் கிண்டல் அடிக்கிறாரா?என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன,

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

MORE NEWS FROM TNNEWS24 DIGITAL