மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பழங்குடியினர் சமுதாயமான இருளர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக திரைப்படம் எடுத்த சூர்யாவிற்கு ஒன்று என்றால் எதிர்ப்பாளர்கள் மீது பாம்பை எறிவோம் எனவும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது ஆவேசமாக குறிப்பிட்டுள்ளனர்.
ஜெய்பீம் திரைபடத்தை உருவாக்கியதற்காக நடிகர் சூர்யாவுக்கும், பழங்குடி மக்கள் நலனுக்காக சில திட்டங்களை ஏற்படுத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்டு நாயக்க சமூக மக்கள், கழுத்தில் பாம்பையும், கையில் எலியையும் வைத்துக் கொண்டு ஸ்டாலினையும், சூர்யாவையும் வாழ்த்திப் பாராட்டி ஆட்டம் போட்டனர் அவற்றை தொடர்ந்து, “எங்கள் தமிழக பழங்குடி மற்றும் நாடோடி மக்கள் தமிழக அரசுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றும்.,
எந்த சூழ்நிலையிலும், எங்கள் பழங்குடி நாடோடி இன மக்கள் நடிகர் சூர்யாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். எங்களது தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பாக, எங்களது நிபந்தனையற்ற தார்மீக ஆதரவை அரசுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டு மனுவொன்றை ஆட்சியரை சந்தித்து கொடுத்தனர்.
மேலும் சூர்யாவிற்கு ஒன்று என்றால் "பாம்பை எறிவோம்" எனவும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவேசமாக பேசினார், இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் சூர்யா ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள சூழலில் எதிர் தரப்பினர் இடையே கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.
சூர்யா ஒரு படத்தில் சிங்கத்தை காட்டில் பார்த்து இருப்ப கம்பீரமா ரோட்டில் நடந்து பார்த்து இருக்கியா என பஞ்ச் டயலாக் பேசுவார் அதை அப்படியே மாற்றி பாம் வீசி பார்த்து இருப்ப பாம்பை வீசி பார்த்து இருக்கியா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.