தமிழக அரசால் 2017-ம் ஆண்டு கம்பர் விருது பெற்ற இலங்கையை சேர்ந்த ஜெயராஜ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தெரிவித்த தகவல் தற்போது இலங்கையில் படு வைரலாக பரவி வருகிறது, தற்போதைய சூழலில் உங்கள் மனதை கவர்ந்த தலைவர் ஒருவர் பெயரை கூறுங்கள் என கேட்க அதற்கு இலங்கை ஜெயராஜ், ஒருவர் அல்ல இருவரை கூறுகிறேன் என இலங்கையை சேர்ந்த சாணக்கியன் என்பவரையும் இந்தியாவை சேர்ந்த அண்ணாமலை குறித்தும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பேசியுள்ளார்.
அதில் அண்ணாமலை குறித்து இலங்கை ஜெயராஜ் பகிர்ந்த தகவல்கள் ஆச்சர்யத்தை கொடுக்கின்றன.இலங்கை ஜெயராஜ் குறிப்பிட்டதாவது, தமிழ்நாட்டின் அண்ணாமலை! முன்னாள் I.P.S அதிகாரி என்கின்ற அடையாளத்துடன் மட்டும் வந்தவர். இன்று மாற்றுக்கட்சித் தலைவர்களை மட்டுமல்லாது, தம் கட்சித் தலைவர்களையும் கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பாரதீய ஜனதாக்கட்சியின் பெயர் சொல்லிக் கால்வைத்தாலே, தமிழ்நாட்டு மண் அவர்களைத் தூக்கி எறியும் என்று இருந்த சூழலை முற்றாக மாற்றி, அக்கட்சி ஆட்சி அமைத்துவிடுமோ?
எனப் பலரையும் ஐயுற வைத்திருப்பது அவரது தனிச்சாதனை. சினிமா 'அண்ணாமலை'யை வென்றுவிடுவார் போல் தெரிகிறது. எந்தவித சினிமாக் கவர்ச்சியையும் நம்பாமல் தனித்து நின்று இவர் 'தூள்' கிளப்புவது ஓர் அதிசயம்.
கவர்ச்சியாலன்றி, கருத்தான பேச்சால் அனைவரையும் கவருகிறார். 'எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, பழையபடி விவசாயம் செய்யப்போவேன்'என்ற அவரது கூற்று, பலரையும் ஈர்த்திருக்கிறது. வேண்டாமைஎனும் விழுச்செல்வத்தால் நீண்ட புகழ் பெற்றிருக்கிறார். 'அண்ணா' பெயர் சொல்லி முன்பு புகழ் தேடினார்கள்.
இவரோ, 'வாங்ஙண்ணா, போங்ஙண்ணா' என்று பேசிப்பேசியே புகழ் தேடுகிறார். இந்திய ஊடகங்கள் தரும் காட்சியில், இவர் செல்லும் இடமெல்லாம் கூடுகிற கூட்டம், இது பா.ஜ.க. கட்சிக் கூட்டந்தானா? ஏன ஐயுற வைக்கிறது.
பிழைகண்டால் எவரையும் எதிர்க்கும் அவரது துணிவுக்கு, அச்சமின்றிச் சில ஊடகங்களின் மேல் அவர் தொடுக்கும் யுத்தம் சாட்சி சொல்கின்றது. தமிழ்நாட்டில் மூடிக்கிடந்த தாமரைமொட்டை மலரச் செய்யும் உதயசூரியனாய் உதித்திருக்கிறார்.
பாரதீய ஜனதாக்கட்சிக்குத் தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் ஒருபெரும் சொத்து என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் இலங்கை ஜெயராஜ், தமிழகம் கடந்து இலங்கை தமிழர்கள் இடையேயும் அண்ணாமலை புகழ் பெற்று இருப்பதன் அடையாளமாக இந்த கருத்து பார்க்க படுகிறது.