24 special

இந்துக்களே உஷார்; கண்ணகி கோயிலை கேரளாவுக்கு தாரை வார்க்கிறதா தமிழக அரசு?

Kannagi statue
Kannagi statue

கண்ணகி - மங்களதேவி கோயிலை கேரளாவுக்கு தாரைவார்க்க, இந்து சமய அறநிலையத்துறை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம், வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில், வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கண்ணகி கோட்டம் மங்களதேவி கோயில் உள்ளது. கண்ணகி தேவியை வழிபட, சித்தரபௌர்ணமி அன்று, தமிழ் மக்கள்  செல்கின்றனர்.தற்போது கண்ணகியின் மங்களதேவி கோயிலை, கேரள மாநிலத்திற்கு தாரை வார்க்க முயற்சி நடக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.


அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள்,  அறநிலையத்துறை செயல் அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'மங்களதேவி கண்ணகி கோயில், துறை கட்டுப்பாட்டில் இல்லை' என்றுகூறியுள்ளார்.இதுஇதன் வழியாக, கேரள மாநிலத்திற்கு கண்ணகி கோயிலை தாரை வார்க்க, தமிழக அரசு உதவி செய்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. 'டிஜிட்டல் ரீ சர்வே' என்கிற திட்டத்தை, கேரள அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நேரத்தில், அறநிலையத் துறை சுற்றறிக்கை,

கேரளாவுக்கு கண்ணகி கோயிலை கொண்டு போய் சேர்த்து விடும் என்பதை  தமிழக அரசு ஏன் உணரவில்லை என்று தெரியவில்லை.  கண்ணகி கோயில் விஷயத்தில், மவுனியாக இருப்பது ஏன்?கண்ணகி கோயில், அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளதா, இல்லையா? என்பதை அரசு3-12-2022 தெளிவுபடுத்த வேண்டும்’ என பிரபல நாளிதமிழும் செய்தி வந்துள்ளது.

இந்த பிரச்சனை,  1982 இல் கேரளா அரசு அன்றைய மதுரை மாவட்டத்திலிருந்து அபகரித்து கொண்டது. இது இன்றைய சிக்கல் அல்ல…இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் 37 ஆண்டுகளுக்கு வழக்கு தொடர்ந்துள்ளதாக வழக்கறிஞர் ஒருவரும் ஆவேசத்துடன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- அன்னக்கிளி