24 special

ஆகா ஆரம்பமே அதிருதே! - திமுக கூட்டணிக்கு விழுந்த இடி

Annamalai,mkstalin
Annamalai,mkstalin

கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய பொதுவுடமைக் கட்சி, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்கு நாடு தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி போட்டி இட்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டனர். 


இதில் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த டாக்டர் டி ஆர் பாரிவேந்தர் திமுக கூட்டணியில் வெற்றி அடைந்தார். இப்படி பெருவாரியான கூட்டணியாக  2019 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட திமுக அடுத்தபடியாக வந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து தமிழக அரசியலில் மாபெரும் மாற்றங்களை நடந்துள்ளது. 

முதலில் பாஜகவின் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார் அதற்கு பிறகு மெல்ல மெல்ல பாஜகவின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்து தற்போது எதிர்க்கட்சி என்று கூறியவுடன் முதலில் மக்கள் மனதில் வரும் கட்சியாக பாஜக மாறி உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதோடு ஆளுங்கட்சிக்கு எதிரான பல சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியின் முதல் குறைபாடாகவே வாக்குறுதிகள் கூறியது கூட நிறைவேற்ற வில்லை என்று அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது. அதோடு கள்ளச்சாராய விவகாரம், டாஸ்மார்க்கில் நடத்தப்படும் ஊழல்கள், பால் விலை ஏற்றம், திமுகவின் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள், சட்ட வழக்குகள், அமலாக்கத்துறை வருமானவரித்துறையில் சோதனைகள் இப்படிப்பட்ட செய்திகளை தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறது அதேவேளையில் பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மக்களிடம் தரைக்குறைவாக பேசி வருவதும் திமுகவின் ஆட்சியில் அதிகமாக நிகழ்ந்து வருகிறது இதனால் முன்பு இருந்ததை விட மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகமாகிவிட்டது என செய்திகள் வருகின்றன.

ஆட்சி பொறுப்பை ஏற்றும் ஆட்சியில் அமைந்திருக்கும் அரசுக்கு எதிரான சூழ்நிலையே தற்போது நிலவி,  பாஜகவிற்கு சாதகமான அரசியல் சூழ்நிலை காற்று வீசி வருவதால் கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதான திமுகவின் கூட்டணியை சேர்ந்த ஒருவர் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து விலகி வந்து பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். 

கடந்த முறை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஐ ஜே கே கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் கடந்த சில நாட்களாகவே திமுகவிற்கு எதிரான கருத்துகளையும் பாஜகவிற்கு சாதகமான சில கருத்துக்களையும் கூறி வந்தார். இந்நிலையில் டெல்லியில் பாஜகவின் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுகவை கூட்டணியில் இருந்த ஐ ஜே கே கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதியின் எம்பி பாரிவேந்தருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

எம்பி பாரிவேந்தரும் அந்த அழைப்புகளை ஏற்று இதில் கலந்துகொண்டு வந்துள்ளார் என்று தகவலும் கூறியுள்ளது. அதை அடுத்து இவர் சமீபத்தில் பிரதமரை பாராட்டியும் பேசினார். மேலும் நேற்றைய தினத்தில், NDA கூட்டணியில் தான் 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள போகிறோம் இது உறுதியான செய்தி மேலும் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பது பற்றி இன்னும் கலந்தாலோசிக்க படவில்லை அதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று செய்தியாளர்கள் மத்தியில் தகவலை வெளியிட்டார். 

கடந்த முறை திமுக வெல்வதற்கு ஒரு முக்கிய தொகுதியாக அமைந்த பெரம்பலூர் தொகுதியின் எம்பி தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. என்னடா இது தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சி மாநாட்டிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலும் இருந்து கொண்டு வருகிறோம் ஆனால் மாநிலத்தில் இப்படி பின்னடைவாக இருக்கிறதே எனவும்,  மாநில அளவில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் நம்மை விட்டு எகிறி குதித்து ஓடுகின்றனர் எனவும் அறிவாலயத்தில் யோசனைகள் பலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தபடியாக, இன்னும் சில காட்சிகள் வேறு திமுகவில் இருந்து விலகி பாஜகவின் இணையலாம் பொறுத்திருந்து பாருங்கள் என கமலாய வட்டாரங்கள் கண்ணடிக்கின்றன.