டில்லி : தமிழகத்தை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் கடுமையான முறையில் பதிலடி கொடுத்தார் மேலும் உண்மை கசக்கத்தான் செய்யும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது நேற்றைய தினம், திமுகவின் டிஆர் பாலு பெரும் முதலாளிகளுக்கு பண சலுகை காட்ட படுவதாகவும் அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது
வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் திவாலாகிய நபா்களிடம் இருந்து, அந்த தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன யாருடைய கடனும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தம் கிடையாது.
தற்போது கடன் வாங்கியவர்கள் சொத்துக்களை விற்று கடனை திரும்ப பெற்று வருகிறோம், இப்படி ஒரு நடவடிக்கை எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது வங்கிகள் கையாளவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசுதான், திவாலானவர்களிடமிருந்து வாராக்கடன் தொகையை முதல் முறையாக வசூலித்துள்ளது .
இதுவரை ரூ.10,000 கோடிக்கும் அதிகமான தொகையை பொதுத்துறை வங்கிகள் திவாலான நபர்களிடமிருந்து வசூலித்துள்ளன இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது அரசியல் நோக்கத்துக்காக பல நிறுவனங்களுக்கு கடன் தரப்பட்டது.. அந்த வாராக்கடனும் முறையாக வசூலிக்கப்படவில்லை என்றார் அரசியல் லாபத்துக்காக, வங்கிகளில் கடன்களை முந்தைய காங்கிரஸ் அரசு தாராளமாக வழங்கியது என்றும்
அவ்வாறு வழங்கிய கடன்கள் பல, வாராக்கடன்களாக மாறியுள்ளன என்றும் ஆனால், வாராக் கடன்களை வசூலிக்க ஒரு நடவடிக்கை கூட காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை என்ற அடுக்கடுக்கான நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.குறிப்பாக, காங்கிரஸின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மறுபடியும் நிர்மலா சீதாராமன் பேசும்போது, ''உண்மை கசக்கத்தான் செய்யும். அரசியல் லாபத்துக்காகவே, காங்கிரஸ் ஆட்சியின்போது, கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன,'' என்று மறுபடியும் கூறினார்சிறு சேமிப்பு முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நிர்மலா சீதாராமன் கொடுத்து பதில் உரைக்கு டி.ஆர்.பாலு எந்தவித பதிலும் மறு கேள்வியாக கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.