சீனாவுடன் கூட்டு சேர்ந்த எந்த நாடும் உருப்படாது எனவும் 2014-ல் பாஜக ஆட்சி அமையாமல் சோனியா காந்தி வழிகாட்டுதலில் ஆட்சி அமைந்து இருந்தால் இலங்கையின் நிலைதான் இந்தியாவிற்கு உருவாகி இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் சுந்தர் ராஜசோழன் இது குறித்து அவர் பகிர்ந்த கருத்து பின்வருமாறு :-
2014 ல் மீண்டும் சோனியா வழிகாட்டுதலில் அரசு அமைந்திருந்தால் நிச்சயமாக இலங்கையை போன்ற ஒரு நிலை வந்திருக்கலாம், அண்டை நாடுகளுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி,சீனக் கம்யூனிஸ்ட்டோடு கட்சி ரீதியாக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு நமது உரிமைகளை தாரை வார்க்க காத்திருந்தவர்களின் ஆட்சி இங்கே அமையாமல் தடுத்ததில்தான் இந்திய மக்கள் தப்பிப் பிழைத்தார்கள்.
அது அவர்களின் அறிவல்ல,இந்த தேசத்தை வழி நடத்தும் புண்ணிய கர்மா, யோசித்துப் பாருங்கள் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகமே தவித்துக் கிடக்கையில், இத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி கொடுத்து,பட்டினி சாவு வராமல் தடுத்ததே அளப்பறிய சாதனை..முந்தைய அரசுகள் இருந்திருந்தால்? அதை கனவாகக் கூட சிந்திக்க அச்சமாக உள்ளது.
இலங்கை சிங்கப்பூரை போல இரண்டு மடங்கு வளர்ந்திருக்க வேண்டிய அற்புதமான தீவு.அது வளர்ந்திருந்தால் தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் அதீதமாகஇருந்திருக்கும், ஆனால்,அங்கே அதை நடக்கவிடாமல் உள்நாட்டு யுத்தம் அழித்தது.அங்கே போர் நடக்க வேண்டும் என்று நினைத்த சக்திகள்தான் இலங்கையின் இந்த நிலைக்கு காரணம்..அந்த போரைக் காரணம் காட்டி அந்த நிலத்தை ஆளும் குடும்ப ஆட்சிதான் இந்த நிலைக்கு காரணம்.
நாங்கள்தான் உங்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என நேரு குடும்பம் இந்த தேசத்தை சல்லடையில் சலித்தது போலேதான் போர் வெற்றியை காரணம் காட்டி அங்கே ஒரு குடும்பம் ஆள்கிறது, இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடமானது,குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,இந்த ஆசியபேட்டையில் என்றைக்கும் நம்பக்கூடாத மிகப்பெரிய அரக்கன் சீனா, CCP யோடு டீலுக்கு போகும் யாரும் வீழ்ச்சியின் தூதுவனே.
மற்றபடி இலங்கை மீளும்,அதுவும் புண்ணிய பூமியே வருங்காலத்தில் இந்தியா - இலங்கை உறவு எப்போதுமில்லாத அளவு வலுவாகும். அது இந்துமாக்கடலில் புதிய அரசியல் வரலாற்றை எழுதும் என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.