Tamilnadu

இடமும் வேண்டாம் வீடும் வேண்டாம் கொந்தளித்த "அஸ்வினி" ஒரே மாதத்தில் தலைகீழாக மாறிய விடியல்!

stallin and aswini
stallin and aswini

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் அஸ்வினி யூடுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் மூலம் பிரபலமடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினே நேரடியாக வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அஸ்வினியின் செயல்பாடு அமைந்த நிலையில் தற்போது அது தலை கீழாக மாறி இருக்கிறது. மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு மூலம் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் மற்றும் அதே சமூதாயத்தை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது, கோயில் நிர்வாகத்தினர் அவர்களை உட்கார விடாமல் அடித்து துரத்தி அவமானப்படுத்தினர். இதையடுத்து, அந்த நரிக்குறவ பெண்கள் சாமி எங்களை முதல் பந்தியில் அமர வைக்க வேண்டாம். கடைசி பந்தியிலாவது, எங்களை உட்கார வையுங்கள் வயிறு பசிக்கிறது என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த தாகவும்.


அதற்கு, கோயில் நிர்வாகம் முதல் பந்தியில் மட்டும் இல்லை கடைசி பந்தியிலும் உங்களை உட்கார விடமாட்டோம் என கூறியதாகவும் இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை யூடூப் சேனல் ஒன்றில் பேசினார். இந்த காட்சி, மிக பெரிய வைரலானது. மேலும், அந்த காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் ஆய்வுக்காக வந்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அந்த பெண் மற்றும் அந்த சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அவரும் அன்னதானம் சாப்பிட்டார்.

அப்போது, அஸ்வினி என்ற பெண்ணிடம் நீங்கள் வசிக்கும் பகுதியில் எதாவது குறைகள் உள்ளதா என கேட்டார். அதற்கு, அந்தப் பெண் நாங்கள் 25 வருடமாக பூஞ்சேரியில் மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகிறோம். எங்களுக்கு, வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, அதேப்போல் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லையென அமைச்சரிடம் முறையிட்டார். இவை அனைத்தும், முதல்வரிடம் ஆலோசித்து உடனே நிவர்த்தி செய்யப்படும் அப்பெண்ணிடம் உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு  வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளையும்  வழங்கினார்.

முன்னதாக, நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வருக்கு அப்பெண் பாசிமணி அணிவித்தார். பின்னர், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுடன் முதல்வர் அமர்ந்து குழுப் புகைப்படம் எடுத்து கொண்டு, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார். அப்போது, தனக்கு அருகே இருந்த நரிக்குறவ பெண் ஒருவரின் செல்போனை வாங்கி முதல்வர் அப்பெண்ணுடன் செல்பி எடுத்தார். அந்த, புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய பயனாளிகள் பவானி மற்றும் அஸ்வினி ஆகியோர் முதல்வரை தங்கள் வீடுகளுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அவர்களது அழைப்பினை ஏற்று, முதல்வர் அவர்களது வீடுகளுக்கு நடந்தே நேரில் சென்று, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அப்போது, அஸ்வினி வீட்டில் அமர்ந்து அப்பெண்ணுடன் சிரித்துப் பேசினார். அந்த பெண் கண்ணீர் மல்க கை கூப்பி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்  இதெல்லாம் பழைய வரலாறு ஆனால் இப்போது முக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.,

அஸ்வினி உள்ளிட்ட நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டால் அரசோ எங்கோ ஒரு இடத்தை ஒதுக்கி அதிலும் குறுகிய இடத்தில் தங்களை அடைக்க பார்ப்பதாக அஸ்வினி உள்ளிட்டோர் குற்றம் சுமத்தி வீடும் வேண்டாம் இடமும் வேண்டாம் அன்று சொன்னது வேறு இன்று செய்வது வேறு என கொந்தளித்து அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் நல்ல காலம் பிறந்தது என்று நினைத்தோம் சாமி ஆனால் இப்படி தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை சாமி என கொந்தளிப்பில் சாபம் விட்டு வருகின்றனர்  நரிக்குறவர் சமூகத்தினர்.  இந்த விவகாரம் குறித்து தமிழக ஊடகங்கள் மூடி மறைத்து வருவதாகவும்  குற்றசாட்டு எழுந்துள்ளது.