Tamilnadu

இனி அதிமுக சசிகலா கையில்.......ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..! பரபரப்பான அரசியல் களம்..!

Admk and sasikala
Admk and sasikala

சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட  அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் இணைத்து ஒரே கட்சி ஆக்கி அம்மா ஜெயலலிதாவின் கனவான நூறாண்டுகள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கையாக அளித்துள்ளனர். இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்ததாக அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேச்சு அடிபட்டது. இந்நிலையில் சசிகலா, டி டிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்த்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அதற்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சையது கான், முன்னாள் எம்பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுகவில் சசிகலாவையும் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து வலியுறுத்தினர். அதனைப் பெற்றுக் கொண்ட ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து தேனி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் பெரியகுளம் அருகே உள்ள பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.

இதுபோன்று தோல்வியை சந்திக்க கூடிய கட்சி அதிமுக அல்ல என்றும் இதற்கு காரணம் நம்மிடைய உள்ள பிரச்சனை தான் காரணம் என்றும் ஒரே கட்சியாக இல்லாமல் நாம் பிரிந்து கிடப்பதுதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் எனவே அம்மா ஜெயலலிதாவின் ஆசைப்படி இந்த கட்சியை நூறு ஆண்டுகாலம் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் தான் அது முடியும் என்பதால் இந்த கட்சியில் அண்ணா திமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒரே கட்சியாக இணைத்து மீண்டும் பலமுள்ள கட்சியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நமது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அய்யாவிடம் அளித்துள்ளோம் என்றும் கூறினார்.

யார் யார் இந்த கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு கட்சியிலிருந்து சென்ற அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் இந்த கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் முக்கியமாக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது என்றும் இது முதல்கட்டமாக தேனியில் ஆரம்பித்துள்ளோம் என்றும் இது தமிழகம் முழுவதும் தொடரும் என்றும் கூறினார். கூறி முடித்தவுடன் பார்த்திபன் முன்னாள் எம்பி மாவட்ட செயலாளர்  ஆகியோர் சின்னம்மா வாழ்க என்று கோஷம் போட்டனர்.

இந்நிகழ்வு ஒபிஸ் எடுத்துள்ள தீர்க்கமான முடிவாக இருக்கும் என பேசப்படுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் கூட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை எடப்பாடி தனியாக சென்றே பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எடப்பாடியின் பன்னீர் இடையேயான விரிசல் அதிகமாகி உள்ளது என அரசியல்  விமர்சகர்கள் கருத்து சொல்ல தொடங்கி உள்ளனர்.