நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டி ஒன்று கொடுக்க சென்று திமுகவையும் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளார் திராவிட இயக்கத்தை சேர்ந்த சுப வீரபாண்டியன் , தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கடந்த வாரம் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார், அதில் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு சுபவீ கொடுத்த மழுப்பலான பதில்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன .
நெறியாளர் சுபவீரபாண்டியனை நோக்கி ஏன் இந்து மத பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து சொல்வது இல்லை , மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது ஏன் ? தமிழக பாட புத்தகத்தில் தலைவர்கள் சாதி பெயரை நீக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது யார் ? பாட புத்தகத்தில் சாதியை நீக்கிவிட்டு பள்ளியில் சேரும்போது ஏன் சாதி பெயரை கேட்கிறீர்கள் ?
பெரியார் என்ன சாதனை செய்துவிட்டார் என நூறு கோடியில் சிலை ,சிலைகளை வணங்க கூடாது என சொல்லிவிட்டு பெரியாருக்கு சிலை வைப்பது எந்த வகையில் நியாயம் என்ற பல்வேறு கேள்விகளை நேரடியா பளிச் பளிச் என எழுப்பினார் நெறியாளர் , இதற்கு சுபவீ அளித்த பதில் மிகவும் மழுப்பலாக அமைந்தது .யேசு ,நபிகள் இருவரும் வாழ்ந்த வரலாறு இருக்கிறதாம் ஆனால் விநாயகர் வாழ்ந்த வரலாறு இல்லையாம் அதனால் திராவிட இயக்க கோட்பாடுபடி இந்து மத பண்டிகைகளுக்குமட்டும் வாழ்த்து சொல்வது கிடையாதாம் .
அதோடு மற்ற மதங்களில் சாதி இல்லையாம் பிரிவுகள்தான் இருக்கிறதாம் என்ற பொய்யை வாய் கூசாமல் கூறியுள்ளார் சுபவீ , சுபவீ இப்படி சொல்ல நெறியாளர் ஏன் நீங்கள் கூறிய கருத்துக்களை சொல்லி ஸ்டாலின் இதனால்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சொல்ல வேண்டியதானே அப்படி முதல்வர் ஏன் கூறவில்லை , ஏன் வாயே திறக்காமல் அமைதியாக இருக்கிறார் என கேட்க வாயடைத்து போய்விட்டார் சுபவீ
அடுத்தது புத்தகத்தில் சாதி பெயரை நீக்க வேண்டியது நாங்கள் எடுத்த முடிவு இல்லை ,அதிமுக எடுத்த முடிவு என ஏன் சொல்லி தப்பிக்க பார்க்கிறீர்கள் நேரடியாக சொல்லவேண்டியது தானே நாங்கள்தான் சாதி பெயரை நீக்க பார்த்தோம் என ஏன் அதை முதல்வர் முடிவு எடுப்பார் என லியோனி பதில் அளிக்கவேண்டும் என கேட்க அதற்கும் மழுப்பலான பதிலை கொடுத்துள்ளார் சுபவீ .
இப்படி மொத்தத்தில் வரலாற்றில் இல்லாத பொய்யயும் ,கதைகளையும் மட்டுமே பேசி வழக்கம் போல் இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்துவிட்டு விவாதத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார் சுபவீ , தற்போது சுபவீ தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாக மாறிவரும் நிலையில் ஏற்கனவே அமைச்சர் தியாகராஜனால் ஒரு பக்கம் பிரச்சனை என்றால் தற்போது சுபவீ இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என பெரும் சர்ச்சையை உண்டாக்கிவிட்டு சென்றது ,ஆளும் கட்சியான திமுகவிற்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது . வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது .