24 special

எதிர்கட்சி தலைவர் பதவிக்கு எதிர்ப்பு....உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

edapadi
edapadi

முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளருமான  ஏ.சுப்புரத்தினம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு எதிராக கோவாரண்டோ வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். வேட்பு மனுவில் தனது மனைவி ராதாவின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்யவில்லை, கல்வி தகுதி ஆகியவை குறித்து வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் ' எப்படி பழனிசாமி வேட்ப்பு மனுத்தாக்களில் கல்வி தகுதியையையும், சொத்து விவரங்களையும் மறைத்தது தவறான நடவடிக்கை மட்டும் அல்ல அது ஊழல் நடவைக்கையும் கூட என் தெரிவித்துள்ளார். 


மேலும், வேட்புமனுவை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை தந்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார். சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பி பெற' வலியுறுத்தி அந்த மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு இன்று அக்.,16 சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது .மனுதாரர் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் கோவாரண்டோ வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்புமனுவில் தகவல்களை மறைத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிப்பது தகுதியிழப்பு ஆகாது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருந்தால் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனவும், தகுதில்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்து தான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.