ஆளும் கட்சியான திமுக சமீபத்தில், பைப்லைன் அமைக்காமல் குடிநீர் குழாய் பொறுத்தி உள்ளதாக வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இந்திரவனம் கிராமத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்ற இளைஞர், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் மாநில அரசின் ஒப்பந்ததார் செய்யவிருந்த ஊழலை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது, உஷாரான கமிஷன் அரசு பணிகளை மறுசீரமைப்பு செய்ததோடு, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அந்த இளைஞர் மீது வழக்கையும் பதிவு செய்துள்ளது.
ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக திமுக அரசு இப்படியொரு அதிகார துஷ்பிரயோகத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், சோசியல் மீடியாவில் தன்னிடம் காரசாரமாக கேள்வி கேட்ட நபருக்கு மிகவும் தன்மையாகவும், பொறுமையாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்துள்ள பதில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னூரில் தொழில்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றதால் அவரை வரவேற்று பாஜக கட்சி கொடிகள் நடப்பட்டிருந்தன (இதை அப்புறப்படுத்த வந்த காவல்துறையினர் பாஜக தொண்டர்களின் எதிர்ப்பாலையை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது தனிக்கதை).
தற்போது அடுத்த நெருப்பைக் கொளுத்திப் போடும் விதமாக, அறப்போர் இயக்கம் ஜெயராம்தனது ட்விட்டர் பக்கத்தில் , “புயல் வரும் நாள் அன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா
அண்ணாமலை அவர்களே?? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன ? தமிழ்நாடு காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்? என பதிவிட்டிருந்தார்.
இந்த ட்விட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவும், அரசியல் ஆசானாகவும் இருக்கும் அண்ணாமலையைப் பார்த்து “அறிவிருக்கா?” என ஏகவசனத்தில் பேசியது பாஜக தொண்டர்களை கொதிப்படைய வைத்தது. தமிழக பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை நினைத்திருந்தால் இந்த ட்வீட்டிற்கு எப்படி வேண்டுமானாலும் பதில் கொடுத்திருக்கலாம். இல்லையெல், உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா? என புறந்தள்ளி இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தை அண்ணாமலை கையாண்ட விதம் மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ஆம், அறப்போர் ஜெய்ராமின் ட்விட்டிற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, “அண்ணா! உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி!” என யாரும் எதிர்பார்க்காத... ஏன்? தமிழக மக்களே இதுவரை கண்டிராத அரசியல் நாகரீகத்துடன் தன்மையாக பதிலளித்துள்ள அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அண்ணாமலையின் இந்த ட்விட்டர் பதிவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வரும் பாஜக அல்லாதவர்கள் இதுதாங்க நல்ல தலைவருக்கு அழகு” என பாராட்டி வருகின்றனர்.
- அன்னக்கிளி