பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி இந்தியாவை உலுக்கியுள்ளது, இந்த விவகாரத்தில் முதல் நிலையிலேயே இது மத ரீதியிலான தற்கொலை இல்லை என எஸ்பி ரவுளி பிரியா தெரிவித்தது கடும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
போலீஸ் எஸ்பி ரவுளி பிரியா மீது உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது, மாணவி தெளிவாக வீடியோவில் தனது சாவிற்கு மதமாற்ற செய்ய வற்புறுத்தியதும் காரணம் என குறிப்பிட்டு இருக்கும் சூழலில் அதை கவனத்தில் கொள்ளாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எப்படி முதல் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் தவறான தகவலை தெரிவிக்கலாம் என நாடு முழுவதும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகளே கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இது ஒரு புறம் என்றால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யாவின் தந்தை மற்றும் தாய்(சித்தி) பேட்டி அளித்தனர், லாவண்யாவின் தந்தை தெரிவித்ததாவது என் மகள் விஷம் குடித்த விஷயமே எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. விஷம் குடித்தது ஏன்? என்று மகளிடம் கேட்டபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதனால் என்னை கொடுமைப்படுத்தினார்கள்.
அந்த கொடுமை தாங்க முடியாமல் நான் விஷம் குடித்துவிட்டேன் என்று தெரிவித்தார். எனது மகளை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி அவளது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று மாணவியின் தந்தை கூறினார்.
இதையடுத்து பேட்டி கொடுத்த அவரது மனைவி கடுமையாக தமிழக காவல்துறையை கண்டித்தார் செய்தியாளர் ஒருவர் உங்கள் மகள் மத மாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று போலீஸ் சொல்லிக்கிறதே என கேட்க வெளுத்து எடுத்துவிட்டார், எங்க பாப்பா வீடியோ பதிவு செஞ்சுருக்கு அது பொய்யா? எப்படி காவல்துறை அப்படி சொல்லலாம், உடனடியாக சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்யவேண்டும், தமிழகத்திலும் இந்தியாவிலும் சரி மதமாற்றத்தால் தற்கொலை செய்யும் கடைசி மாணவியாக எங்கள் குழந்தை இருக்கவேண்டும் என சீறிவிட்டார்.
கீழே பேட்டி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது :-