தஞ்சை பள்ளி மாணவி தனது தற்கொலைக்கு தனது பள்ளியை சேர்ந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரி வார்டன் காரணம் எனவும், மேலும் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற சொல்லி அளுத்தம் கொடுத்தார்கள் எனவும் மரண படுக்கையில் வீடியோ பதிவு செய்துவிட்டு இறந்தார்.
மாணவியின் தற்கொலை தமிழகத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் வைத்திருப்போரை அதிர செய்துள்ள சூழலில் இதுவரை தமிழகத்தை சேர்ந்த திரை பிரபலங்களோ, சமூக ஆர்வலர்களோ பெரிதாக எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை மாறாக இந்திய அளவில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பாக தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மத ரீதியிலான காரணம் இல்லை என சொல்லி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம் மாணவியே தனது சாவிற்கு மதமாற்றமும் காரணம் என வீடியோவில் பதிவு செய்துள்ளார், அப்படி இருக்கையில் எப்படி எடுத்த எடுப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவி மரணத்திற்கு மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை என சொல்கிறார் என தெரியவில்லை என பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றனர்.
இந்த சூழலில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நாகேஸ்வரராவ் தஞ்சை காவல் காணிப்பாளர் மீது குற்றவாளியை காப்பாற்ற நினைப்பது, பொய் சொல்வது போன்ற காரணங்களை கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சகத்திடம் தஞ்சை எஸ்பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது, மாணவியின் வீடியோ பதிவு இருக்கும் சூழலிலும் குற்றவாளியை காப்பாற்ற துணைப்போகிறார் எனவும், முழுக்க முழுக்க திசை திருப்பும் செயல் எனவும் உடனடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனியார் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று பாஜக சார்பில் மிக பெரிய ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் நடைபெற இருக்கிறது, இதில் பல்வேறு விவகாரங்கள் வெளிவரும் என்பதால் மதமாற்றம் செய்ய நினைத்த பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்களை காப்பாற்ற நினைத்த தஞ்சை மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு கடும் சிக்கல் உண்டாகியுள்ளது.