24 special

தமிழகத்திலிருந்து சுரண்டப்பட்டு கேரளத்திற்கு செல்கிறதா! சாட்டையடி போல் அண்ணாமலையின் ஒவ்வொரு கேள்வியும்?

annamalai ,
annamalai ,

திமுக அரசுக்கு அடிமடியிலேயே கை வைக்கும் புதிய அஸ்திரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ளது அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. 


திமுக வந்து அரசு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்து வந்தது, எந்த ஒரு அரசு ஒப்பந்த வேலைகளும் திமுகவினருக்கு கிடைக்கவில்லை! 10 ஆண்டுகளாக எதிர் கட்சியாக இருந்த காரணத்தினால் திமுகவினர் செலவு மட்டுமே செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் வருவாய் இல்லாமல் தவித்து வந்தனர், அந்த ஆசையில் தற்பொழுது ஆளும்கட்சியாக திமுக ஆட்சியை பிடித்தவுடன் முதல் வேலையாக தமிழகத்தில் அனைத்து ஒப்பந்த வேலைகளையும் எடுத்தனர், இதனால் கல்குவாரி, மணல் அள்ளுதல், செங்கல் இது போன்ற போன்ற கட்டிடப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் இருந்து அதிக அளவிற்கு கேரளத்துக்கு கடத்தப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது. 

அரசு அனுமதித்த அளவைவிட அதிகமான பொருட்கள் வெட்டி எடுக்கப்பட்டும், தமிழகத்திலிருந்து சுரண்டப்படும் கேரளத்திற்கு செல்கின்றது. இதனால் அதிகமாக பயனடைந்தது அதனை எடுத்துள்ள ஒப்பந்தக்காரர்கள்தானே தவிர மக்கள் கிடையாது மேலும் இப்படி கடத்தப்படுவதன் விளைவாக இங்குள்ள தமிழக மக்கள் இந்த மூலப் பொருள்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாத காரணத்தினால் வீடு கட்டுதல் போன்ற போன்ற பணிகள் அப்படியே முடங்கி உள்ளன. இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை தொடர்ந்து வந்த காரணத்தினால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகமே அனைத்து மக்கள் மத்தியிலும் நேரடி, மறைமுக தொழிலாளர்கள் மத்தியிலும் ஒருமித்த குரலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் விதமாக அண்ணாமலை களத்தில் இறங்கியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் பொறுப்பை ஏற்றதிலிருந்து பாஜகவை வளர்ப்பதற்கு எந்த அளவிற்கு அதிகம்  உழைக்கிறாரோ, அதைவிட அதிகமாக திமுகவை எதிர்ப்பதற்கு உழைத்து வருகிறார். காரணம் தமிழகத்தில் திமுகவை எதிர்த்தாலே பாஜக வளர்ந்துவிடும் என்பது அண்ணாமலையின் செயல்பாட்டில் தெரிகிறது. இந்த சூழலில் தமிழக பாஜக அவ்வப்போது போராட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என பல்வேறு வகையான போராட்டங்களை மக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகிறது. காரணம் திமுக அரசு செய்யும் ஊழல், முறைகேடுகள் மற்றும் விதிமுறை மீறல்களை அவ்வபோது எடுத்துக்கூறி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களுக்கா நீங்கள் வாக்களித்தீர்கள்? என அண்ணாமலை கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் திமுக அரசுக்கு சாட்டையடி போல் விழுகின்றது. 

இதனால் திமுக அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு வந்த நிலையில் தற்பொழுது திமுகவின் அடிமடியில் கை வைக்கும் அளவிற்கு அண்ணாமலை ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார். தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் வரக்கூடிய சட்டவிரோத மணல் கடத்தல்,, கல்குவாரிகளில் இருந்து கடத்தல் போன்றவற்றை மறைமுகமாக பல திமுகவின் பினாமிகள் ஒப்பந்தக்காரர்களாக செயல்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இது போல் கடத்தப்படும் பொருட்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக பாஜக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'தமிழக அரசின் ஆண்டு வருமானம் 1,80,000 கோடி ரூபாய். ஆனால் கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 900 கோடிதான் என்று கூறியது தமிழக அரசு. சில தனியார் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட வேண்டிய ட்ரிப் ஷீட்டை தானாகவே அச்சடித்துக் கொள்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து மட்டும், 12,000 யூனிட் மணல் சட்டவிரோதமாக கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஒவ்வொரு செக்போஸ்டிலும் 100 பா.ஜ.க தொண்டர்கள் ஷிப்ஃட் முறையில் அமர்வோம்.

என்னுடைய ஷிப்ஃட் வரும்போது நானும் அமர்வேன். கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த 20 நாள்கள்தான் டைம். தடுத்து நிறுத்தவில்லை என்றால், 21-வது நாள் முதல் லாரியை நானே தடுத்து நிறுத்துவேன்" என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை. இப்படி திமுகவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் இந்த கனிமவள கடத்தலை அண்ணாமலை கையில் எடுத்திருப்பது திமுகவிற்கு அடிமடியிலேயே கை வைப்பது போன்றதாகும். அண்ணாமலையின் இந்த அதிரடி செயல்பாடு அறிவாலய தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இப்படி அடிப்படையிலேயே கை வைத்தார்கள் எப்படி பொழைக்கிறதுப்பா என்கிற குரல்கள் இப்பொழுது திமுகவில் முக்கிய தலைவர்கள் மத்தியில் எழ துவங்கிவிட்டது. வழக்கம் போல் முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என திமுகவினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.