தமிழகத்தில் எப்போதெல்லாம் மத்திய அரசிற்கு ஆதரவான போக்கோ அல்லது திமுகவிற்கு எதிரான சூழலோ நிலவுகிறதோ அப்போது தமிழக சினிமா நட்சத்திரங்கள் ஏதாவது கருத்து தெரிவிப்பதும் அதன் மூலம் நடப்பு பிரச்சனைகளில் இருந்து ஊடகங்கள் மக்களை திசை திருப்புவதும் தொடர்கதையாக மாறிவருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆளும் அரசாங்கத்தின் மீதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர், தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டு வரும் சூழலில் மக்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது, இந்நிலையில் டாஸ்மாக் கடை திறப்பு கடும் விமர்சனத்தை உண்டாக்கியது, இந்த சூழலில் நீட் தேர்வு ரத்து செய்வதாக வாக்குறுதி கொடுத்த திமுக தற்போது அதில் இருந்து விலகிவிட்டது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என திமுக தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது, ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மக்களை ஏமாற்றும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது திமுக அரசு இந்த சூழலில்தான் மக்கள் திமுகவை நோக்கி எப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கேள்வியை அதிக அளவில் எழுப்ப தொடங்கினர்.
மேலும் பெட்ரோல் விலை ஏற்றம், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம், மளிகை பொருட்கள் விலை ஏற்றம் மக்களை பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது, இந்த விவகாரம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மிக பெரிய அளவில் வெடிக்கலாம் என்பதால் இப்போதே மக்களை திசை திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய மறுக்கிறது என மத்திய அரசாங்கத்தின் மீது மீண்டும் பழியை போட இருக்கிறார்களாம், அதற்காக மீண்டும் நீட் தேர்வு விவகாரத்தை லைம்லைட்டிற்கு கொண்டுவர நடிகர்களை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நேற்றைய ஒத்திகையில் சூர்யா ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுகிறது.
12 ஆண்டுகள் படித்த மாணவனுக்கு மேலும் ஒரு தேர்வு எதற்கு என கேட்கிறார் சூர்யா அப்படி என்றால் IAS IPS தேர்வுகள் எதற்கு அதுதான் பள்ளி கல்லூரி மதிப்பெண்கள் போதாதா? என நெட்டிசன்கள் சூர்யாவின் கருத்தை கிண்டல் செய்து வருகின்றனர், நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர் படிப்பிற்கு என்றே பல பள்ளிகள் பல லட்சங்கள் பியூசாக பெற்று நடந்து வந்தன.
11 ம் வகுப்பு பாடத்தை நடத்தாமலே நேரடியாக 12 ம் வகுப்பு பாடத்தை நடத்தி மதிப்பெண்களை குறியாக வைத்து தேர்வு நடத்தப்பட்டது, இதனால் பல ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், இப்போது நீட் தேர்வு என ஒன்று வந்ததன் மூலம் இந்த பள்ளிகளின் வருமானம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது, நீட் தேர்வில் 11மற்றும் 12 வகுப்பு பாட திட்டத்தில் இருந்து தேர்வு நடைபெறுவதால் 11,12 என இரண்டு வகுப்புகளில் முறையாக படித்தவர்கள் மட்டுமே வெற்றி பெரும் சூழல் உண்டாகியுள்ளது.
இது போன்ற பள்ளிகளில் நடிகர் சூர்யா குடும்பம் அதிக அளவில் முதலீடு செய்து இருப்பதாகவும், நீட் தேர்வின் மூலம் அவர்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதையடுத்தே சூர்யா நீட் தேர்வை உள் நோக்கத்துடன் எதிர்த்து வருவதாகவும், இதன் பின்னணியில் அரசியல் சதுரங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக மீது விமர்சனங்கள் உண்டாகும் நிலை உருவாகும் போது சூர்யா போன்ற நடிகர்கள் ஏதேனும் ஒரு அறிக்கை விடுத்து மக்களை திசை திரும்புவதை கவழக்கமாக வைத்துள்ளனர், நீட் தேர்வு குறித்து அச்சப்படும் சூர்யா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்தாக இருக்கும் என வாக்குறுதி அளித்த திமுக எப்போது அதை நிறைவேற்ற போகிறது என அறிக்கையில் கேட்டிருக்கலாம் ஏன் கேட்கவில்லை எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.