Tamilnadu

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த பெரியாரிஸ்ட்கள் விஸ்வரூபம் எடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்..அதிரடி அறிவிப்பு வெளியாகிறது !

RSS
RSS

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அமைதியாக ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகிறது இந்த சூழலில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்ம சாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதனை எதிர்த்து பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த  10 பேர் கைது செய்யப்பட்டனர்.


அதன் பிறகு பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் எனும் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இரு தரப்பிற்கும் இடையே மோதல் உண்டாக ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் எனும் கட்சியை சேர்ந்தவர்களை விரட்டி அடித்தனர்.

இது தொடர்பாக காவல்துறையிடம் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் எனும் கட்சியை சேர்ந்தவர்கள்  அளித்த    புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும் நாம் தமிழர் உட்பட பல இயக்கங்கள் தொடர்ந்து பள்ளியின் எதிரே போராட்டம் நடத்திவரும் சூழலில் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் குறித்த விழிப்புணர்வு பல மாவட்டங்களிலும் உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் வருகின்றன மார்ச் மாதத்திற்கு முன்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ் எஸ் சாகா வகுப்பை நடத்த அந்த அமைப்பு முடிவு செய்து இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைதியாக நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வை போராட்டம் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஊதி கெடுத்த அமைப்புகள் இப்போது ஆர்எஸ் எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் தமிழகம் வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருப்பதாக வெளியான தகவலால் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக ஆர்ப்பாட்டம் போராட்டம் என அறிவித்து ஒரு இடத்தில் அமைதியாக நடைபெற்ற நிகழ்வை மாநிலம் முழுவதும் நடத்தும் படி செய்து இருக்கிறார்கள் பெரியாரிஸ்ட்கள்.