வைரலாகும் சாந்தி "முகுர்த்த" அட்வைஸ் காட்சி விளங்கிடும் கண்டிக்கும் நெட்டிசன்ஸ்!Shanti
Shanti

தமிழ் சினிமா நாளுக்கு நாள் மக்களை கலாச்சார சீரழிவுக்கு உட்படுத்தி வருவதாக பொது மக்கள் குற்றசாட்டு சுமத்திவரும் நிலையில் தற்போது ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் திருமணமான பெண்ணிற்கு ஒருவர் அட்வைஸ் கொடுக்கிறார். இறுதியில் அவர் பேசும் வார்த்தையில் சர்ச்சையாக இரட்டை அர்த்தத்தில் முடிகிறது இந்த காட்சியை பகிர்ந்து பலரும் கண்டித்து வருகின்றனர், அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி இந்த வீடியோவை பகிர்ந்து,  இந்த நான்சென்ஸ் தான் நாள் முழுக்க தமிழக வீடுகளில் ஓடிக்கிட்டிருக்கு என குறிப்பிட்டுள்ளார்.

வட இந்திய நாடகங்கள் டப் செய்யப்பட்டு தமிழ் கலாச்சாரத்தை சிதைப்பதாக குற்றசாட்டினை சிலர் எழுப்பிய நிலையில் தற்போது அதனை மிஞ்சும் வகையில் இரட்டை வசனம் பேசி பல காட்சிகள் தமிழ் நாடகங்களில் இடம்பெற்று இருப்பது பலரையும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பலருக்கு சீரியல் ஒன்றே கதி எனும் சூழலில் இது போன்று இரட்டை வசனங்கள் கொண்ட நாடகங்களை தணிக்கை செய்யவேண்டும் எனவும் கலாச்சார ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வைரலாகும் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Share at :

Recent posts

View all posts

Reach out